கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். நகைச்சுவை கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு பெயர் பெற்று தந்தது.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடிக்க கால் சீட் பெற்று தந்தது அனிருத் தான் என்று கூறப்படுகிறது. அவர் தான் நயன்தாராவை நெல்சன் சந்தித்து படத்தின் கதையை சொல்லும் வாய்ப்பை பெற்று தந்தது என கூறப்படுகிறது. இந்த படத்துக்கு பின்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். இதுவும் நகைச்சுவை கலந்த படம். மிக பெரிய ஹிட் கொடுத்தது டாக்டர்.
கடனில் தத்தளித்து வந்த சிவகார்த்திகேயனை ஒரு அளவு காப்பாற்றி கரை சேர்த்த படம் டாக்டர் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல வசூலை பெற்று தந்தது. பொதுவாகவே நெல்சன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். பொது மேடைகளில் பேசும் போது, ஏன் சமீபத்தில் நடிகர் விஜயை பேட்டி எடுத்த போது கூட நெல்சனின் நகைச்சுவை கலந்த அந்த பேச்சுக்கள் பார்க்கும் மக்களை குலுங்கி குலுக்கி சிரிக்க வைக்கும்.
நகைச்சுவை உணர்வு கொண்ட நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படமும் வழக்கம் போல் அவரது பாணியில் நகைச்சுவை கலந்த படமாக தான், அந்த படத்தின் கதையை நடிகர் விஜயிடம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான நகைச்சுவை கலந்த படம் என்றால் அது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படம் தான், அதனால் இந்த படம் உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் கொண்டாடும் நகைச்சுவை கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என கதை சொல்லும் போது விஜய்யிடம் தெரிவித்துள்ளார் நெல்சன்.
கதையை கேட்டுவிட்டு முதலில் படத்தின் கதையை ஓகே சொன்ன விஜய். முழுக்க முழுக்க காமெடி படத்தில் நான் நடித்தால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். அதனால் இதே கதையில் மாற்றங்களுடன் ஆக்சன் படமாக எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பு காமெடி படத்தின் கதையை ஆக்சன் படமாக எடுத்த பீஸ்ட் படத்தை இது என்ன படம் என மக்கள் காரி துப்புவது போன்று அமைந்துள்ளது.
இந்நிலையில் வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் பீஸ்ட் படம் தோல்விக்கு பின்பு மிக பெரிய சரிவை சந்தித்து, படத்தில் விஜய்யின் தலையீடு தான் இந்த தோல்விக்கு காரணம் என புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் தான் முட்டாள் தனமாக காமெடி படத்தை ஆக்க்ஷன் படமாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் நெல்சனுக்கு எங்கே போனது அறிவு, முடியாது சார் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்திருக்கலாமே என்று சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.