உசுப்பேத்தி விட்டு ஜம்முனு இருக்கும் விஜய்…. விஜய்க்கு கொஞ்சமாவது சமூக அக்கறை வேண்டாமா.?

0
Follow on Google News

உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா… வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என விஜய் பன்ச் பேசுவது போன்று, அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு அவர் உம்முனு, கம்முனு அவர் வேலையை அவர் பார்த்து சும்மா ஜம்முனு சென்று விடுவார். அந்த வகையில் விஜய் எடுக்கும் தவறான முடிவுகளால், அது தவறான முன்னுதாரமாகி, மிக பெரிய ஆபத்தில் கொண்டு சென்று விடுகிறது.

சமீபத்தில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி, பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலானது, அதில் ‘விஜய் அங்கிள் என்ன பார்க்க வரமாட்டீங்களா?’ என அந்த சிறுமி பேசியிருந்தார், இந்த வீடியோ விஜய் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அந்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசிய விஜய், நீங்க ரெம்ப க்யூட்டா இருக்கீங்க என பேசிய விஜய் அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒரு நாள் நேரில் அழைத்து வாருங்கள் என தெரிவித்தார்.

அபிதா பேகம் என்கிற சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேசிய அடுத்த சில நாட்களில் காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்தவர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று விஜய்யை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என விஜய் வீட்டுக்கு சென்றுள்ளார், ஆனால் வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்த அந்த மாணவி.

விஜய் வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்து நான் உங்களை பார்க்க வேண்டும். என்னை பார்க்க எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் குழந்தையுடன் வீடியோ கால் பேசிய வீடியோவை நான் பார்த்தேன். அதேபோல் என்னிடம் பேசுங்கள், ஒரே ஒருமுறை உங்களுடன் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்கிறேன் ப்ளீஸ் என்று மாணவி விஜய் வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் கெஞ்சும் வீடியோ ஓன்று வைரலாகிறது.

இதில் என்ன கொடுமை என்றால், சினிமா மோகத்தில் மாணவி இப்படி கெஞ்சுகிறார் என்றால், அந்த மாணவியின் பெற்றோர் அட்வைஸ் செய்து, இதெல்லாம் தவறுமா, என்று அழைத்து செல்லாமல், அந்த மாணவி சிசிடிவி முன்பு பேசியதை மாணவி தந்தை வீடியோ எடுத்தவர், மேலும் அதே வீடியோவில் மாணவி தந்தை பேசுகையில், விஜய் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என் மகள் எப்படியாவது விஜயை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒரு போட்டோ மட்டும் போதும்.நீங்கள் நினைத்தால் என் மகள் ஒருமுறையாகவது அவரை பார்க்க முடியும். என் மகளை ஒருமுறை அழைத்து ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் அது போதும் என்று மாணவி தந்தை நடிகர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சிறுமி ஆசையை நிறைவேற்று வகையில் விஜய் வீடியோ கால் பேசி இருந்த நிலையில், நாமும் இது போன்று வீடியோ வெளியிட்டால் விஜய்யை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற ஆசையில், ஒரு பள்ளி மாணவி குடும்பத்துடன் விஜய் வீட்டின் ,முன்பு நின்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், ஆனால் இந்த மாணவி கோரிக்கை ஏற்று விஜய் அந்த மாணவியை நேரில் அழைத்து சந்தித்தால், அதுவே விஜய்க்கு மிக பெரிய சிக்கலாக அமைந்துவிடும்.

இதன் பின்பு ஒவ்வொரு விஜய் ரசிகர்களும் விஜய் வீட்டின் சிசிடிவி கேமரா முன்பு வந்து பேசி வீடியோ வெளியிட்டால் விஜய் என்ன செய்வார்,? ஆகையால் விஜய் இது போன்ற விஷயங்களை மிக கவனமாக கையாள வேண்டும் என்கின்றனர் சமூக அக்கறை கொண்டவர்கள்,அதே போன்று நடிகர் நடிகைகளை குறை சொல்வதே விட்டு விட்டு மக்கள் திருந்த வேண்டும்.

தன்னுடைய குழந்தை படித்து எதாவது ஒரு துறையில் சாதித்து, அவருடன் பலரும் புகைடபடம் எடுக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களே, ஒரு நடிகரை சந்திக்க மகளுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என அந்த நடிகரின் வீட்டின் மும்பு குடும்பத்துடன் கெஞ்சுவது வேதனையளிக்கிறது என்கின்றனர், சமூக அக்கறை கொண்டவர்கள்.

யோவ் வெளிய போயா.. மணிரத்தினத்திடம் இரக்கம்மின்றி நடந்து கொண்ட இளையராஜா…