நடிகர் விஜய் – கீர்த்தி சுரேஷ் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறி உள்ளது. நடிகர் விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால், அவர் நடவடிக்கை எப்படி இருந்தாலும், சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று, அவர் ஒரு நடிகர் தானே என, இந்த சமூகம் கடந்து சென்று இருக்கும்.
ஆனால் நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ள நிலையில், ஒரு அரசியல் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற ஒரு நடைமுறை தமிழக அரசியல் களத்தில் உண்டு. அதே நேரத்தில் ஒரு நடிகனாக விஜய்யை பார்க்காமல், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக மக்கள் பார்க்கும் பொழுது, அதற்கு ஏற்றார் போல் விஜய் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக அரசியல் களத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்கள், மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் என இவர்கள் எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த புகைப்படம் வெளியாகி கொண்டிருக்க, நடிகர் விஜய் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் எங்கே.?
அல்லது அவருடைய கட்சியின் தொடங்கிய முதல் வருடம் என்பதால் அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர் உடன் பொங்கலை இந்த வருடம் கொண்டாடி இருப்பார், அப்படி ஏதும் புகைப்படம் வந்ததா.? என்று தேடித்தேடி பார்த்தால், நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் தான் வெளியானது.
இந்த நிலையில் விஜய் இதை தெரிந்து செய்கிறாரா.? அல்லது இன்னும் ஒரு சினிமா நடிகன் என்கின்ற நினைப்பில் சுற்றுகிறாரா.? என்கின்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஒரு நடிகையின் தல பொங்கலில் விஜய்க்கு என்ன வேலை என்கின்ற கேள்வி இங்கே எழுகிறது.? அதே நேரத்தில் விஜய் அவருடைய வீட்டில் பொங்கல் கொண்டாடியிருந்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு நடிகையின் வீட்டில் தல பொங்கலில் கலந்து கொண்டதுதான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தல பொங்கல் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார் என்கின்ற தலைப்புச் செய்திக்கு பதிலாக, நடிகர் விஜய் அவருடைய மாவட்ட செயலாளருடன் தன்னுடைய கட்சியின் தல பொங்கலை கொண்டாடினார். நடிகர் விஜய் அவருடைய மனைவி குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடினார் என்று ஒரு தலைப்புச் செய்தியில் இடம்பெறும் போது.
அந்த செய்தியை பார்க்கும் மக்களுக்கு விஜய் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும், ஆனால் இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் உடன் விஜய் பொங்கல் கொண்டாடி வருவது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருப்பது மட்டுமில்லாமல், இவர் எங்கே அரசியலில் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்றெல்லாம் கிண்டல் செய்யும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் ஒருவேளை விஜய் தல பொங்கலை கொண்டாடியிருந்தாலும் கூட, அந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் வெளியானால் எவ்வளவு சர்ச்சை ஏற்படும் என்று சிந்தித்து அந்த புகைப்படத்தை வெளிவராதவராவது செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த புகைப்படம் வெளியாகி நடிகர் விஜய் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்ட கொண்டது போன்று அமைந்து விட்டது கீர்த்தி சுரேஷ் வீட்டில் விஜய் கலந்து கொண்ட தல பொங்கல் நிகழ்வு.