பலரும் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது, இதெல்லாம் தியாகம் செய்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருகிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தற்பொழுது 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த வயதுக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடித்தால் மட்டுமே அவரால் சினிமாவில் வெற்றி அடைய முடியும்.
மேலும் அவர் ஒரு கல்லூரி மாணவனாகவோ அல்லது ஒரு காதலிக்கும் இளைஞனாகவோ இனி மேலும் நடிக்க முடியாது என்பதால் விஜய் ஹீரோவாக நடிக்கும் கதை தேர்வுகளை அவர் வயதுக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் விஜய் படம் கொண்டாடப்பட்டாலும் கூட வசூல் ரீதியாக ஒரு சில படங்கள் சத்தமே இல்லாமல் தோல்வி அடைந்தாலும் அதை வெற்றி படமாக காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் வைத்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே படம் எடுக்கும் சூழல் தற்பொழுது உள்ளது. காரணம் விஜய்க்கான சம்பளம் மிகப்பெரிய அளவில் உள்ளதால், அதே நேரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சினிமாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என்றால் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. அந்த இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுமே தற்பொழுது பெரும் நடிகரை வைத்து எடுத்த ஒரு சில படங்களில் பலத்த அடி வாங்கி உள்ளதால்,
அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை கைவிட்டு விட்டு சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க முடிவு செய்ததன் விளைவு, இனிவரும் காலங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் அவர்கள் சொந்த படம் தயாரித்து நடிக்கும் சூழலில் தான் தமிழ் சினிமா உச்ச நடிகர்களின் நிலை உள்ளது. அந்த வகையில் ஒரு உச்ச நடிகரின் வயதான காலத்தில் ஒன்று நடிகர் சிவாஜி கணேசன் மாதிரி அப்பா அண்ணன் கேரக்டரில் நடிக்க வேண்டும்.
அல்லது அரசியலை தேர்வு செய்ய வேண்டும், அப்படித்தான் நடிகை விஜய் 50 வயதை கடந்து அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் நடிகர் விஜய் தற்பொழுது சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தாலும். நடிகர் எம்ஜிஆர் போன்று சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் ஈடுபடலாம் உதாரணத்துக்கு விஜயகாந்த் அப்படித்தான் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட்டார்.
விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்த பின்பு தான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார், அதோ போன்று முதலமைச்சர் ஆக நாற்காலியில் அமர்ந்த பின்பு தான் எம்.ஜி.ஆரும் சினிமாவில் நடிப்பதை விட்டார், ஆனால் எங்கே சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட்டால் தன்னுடைய சினிமா படத்திற்கு ரிலீஸ்சமயத்தில் அரசியல் ரீதியாக பிரச்சனை வரும் என்று பயந்து கொண்டுதான் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் விஜய் முழு வீச்சில் அரசியலில் இறங்குகிறார்.
அந்த வகையில் விஜய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் இறங்குவதற்கு துணிவும் இல்லை மேலும் தொடர்ந்து சினிமாவில் எவ்வளவு நாளைக்கு நாம் பயணிக்க முடியும் என்பதால் அரசியல் பாதையை தேர்தெடுத்துள்ள விஜய்க்கு நன்கு தெறியும் இன்றைய அரசியல் எப்படி ஒரு கார்ப்பரேட் போன்று செல்வம் செழிக்கும் ஒரு துறை என்பது, அதனால் தான் அரசியலை தேர்வு செய்துள்ள விஜய் ஒரு வித பயத்தில் என்ன ஆகுமா, ஏதாகுமோ என்று மெல்ல மெல்ல இறங்கி வருகிறார்.