நடிகர் விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியலில் இறங்க இருக்கும் நிலையில், தன்னுடைய கட்சி கொள்கை என்ன, நமக்கு எதிரி யார் எனபதை சமீபத்தில் நடந்து விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்தார், அதுவும் கூட எதிரி யார் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல தைரியம் இல்லாமல், போகிற போக்கில் மறைமுகமாக விஜய் பேசியது, அவருக்கு பயம் இருக்கும்ல என்பது போன்று அமைத்து இருந்தது விஜயின் போச்சு.
இந்நிலையில் நடிகர் விஜய் சினிமா துறையில் இருக்கும் பலரை மதிக்க மாட்டார் இவரா அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய போகிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில் நடிகர் ராதாரவி பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் ராதாரவி அந்த பேட்டியில் பேசுகையில், என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். அதனால், ஒரு நாள் குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. சமீபத்தில், சர்கார் படத்தில் விஜயுடன் நடித்திருந்தேன். இதற்கு விஜய்-யை நேரில் சந்தித்து நன்றி சொல்ல அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஆனால், விஜய்யின் உதவியாளர் போனை எடுத்து அதற்கு சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது. ”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார். எட்டு வருடத்திற்கு முன்பு ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்து போயுள்ளார் ராதாரவி,
அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம்.அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லையாம். இதே போன்று நடிகர் நெப்போலியன் சமீபத்தில் நடிகர் விஜயால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை பற்றி பேசியுள்ளார். இதுபற்றி நெப்போலியன் கூறியதாவது ‘போக்கிரி படத்தில் நான் பிரபுதேவா அதிகம் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படத்தில் நடிக்கும் நடந்த சம்பவம்.
அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நடந்த சம்பவம் உண்மை தான். போக்கிரி படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் அவரும் நானும் ஒன்றாக நடித்தோம். ஷாட் முடிந்து வெளியே வரும் போது நடந்த சம்பவம் அது. அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது. என் வாழ்க்கையில் அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. நடந்து கொண்டதில்லை. எந்த சூழ்நிலையில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.
அப்போதிலிருந்து அவருடன் நான் பேசுவதும் இல்லை, அவரது படங்களை நான் பார்ப்பதும் இல்லை’ என நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார். நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க முக்கிய நடிகர்கள் இவர்களுக்கு இந்த நிலைமை என்றால், நடிகர் விஜய் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நிலைமை இதை விட மோசம் என்கிறது சினிமா வட்டாரம், அது மட்டுமில்லாமல் விஜயின் உண்மை முகம் என்ன வென்று தெரியாமல் திரையில் பார்க்கும் விஜயை நம்பி வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது என்கிற விமர்சனம் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்…