நடிகர் விஜய்க்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். லைக்கா தயாரிப்பில் விஜய் நடிப்பில் கத்தி படம் வெளியான போது, இலங்கையில் ரஜபக்க்ஷே உடன் நெருக்கிய நட்பில் இருக்கும் லைக்கா தயாரிப்பில் வெளியாகும் கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட விட மாட்டோம் என ஒரு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அப்போது நடிகர் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய சீமான், ‘கத்தி’ படம் என் இனத்திற்கு எதிரான படம் அல்ல. முருகதாசும், விஜய்யும் தமிழ்ப்பிள்ளைகள் என தெரிவித்த சீமான். மேலும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ‘லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்போம். அதற்காக ‘கத்தி’ படத்தையோ, விஜய்யையோ எதிர்க்க முடியாது என சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசினார்.
அதே போன்று தற்பொழுது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படம் ஆந்திராவில் பண்டிகை நாட்களில் வெளியாவதால், தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அங்கே முக்கியத்துவம், அதனால் வாரிசு படம் வெளியிட முக்கியத்துவம் அளிக்க கூடாது என, தெலுங்கு சினிமா துறையில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் போர் கொடி தூக்கினார்கள். இதனால் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் உடனே களத்தில் இறங்கிய சீமான், தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடி என தெரிவித்த சீமான்.
மேலும் இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்” என சீமான் கடுமையாக எச்சரித்தார்.
இப்படி விஜய்க்கு எப்பபோதெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லம் அதிரடியாக களத்தில் இறங்கும் சீமான் தற்பொழுது வாரிசு படம் தமிழகத்தில் வெளியாவதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் உரசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதே தொடர்ந்து, தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைகளிலும் இறங்கி உள்ள சவுக்கு சங்கர் சமீபத்தில் சீமானை நேரில் சந்தித்து ஆதரவும் கேட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் சீமான் தெரிவித்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சவுக்கு சங்கர் மற்றும் சீமான் இருவரும் கை கோர்த்ததின் அரசியல் பின்னணியில் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு எதிராக சினிமாவில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் உதயநிதிக்கு தன்னுடைய அரசியல் பலத்தையும் நடிகர் விஜய் காட்ட தொடங்கிவிட்டார் என்றும், மேலும் இனிவரும் காலங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் சவுக்கு சங்கர் கடுமையான விமர்சனங்களை வைப்பார் என்றும் கூறப்படுகிறது.