என்ன செய்வது என தெரியாமல் பெரும் அச்சத்தில் விஜய்… தெலுங்கானாவில் இருந்து வந்த எச்சரிக்கை..

0
Follow on Google News

தெலுங்கானாவில் கடந்த இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிஆர்எஸ் கட்சி இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த முறை இந்தியா கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாஜகவின் கனவும் மீண்டும் தகர்ந்துள்ளது. இதில் பாஜகவின் கூட்டணியில் போட்டியிட்ட ஜன சேனா கட்சிக்கு மட்டும் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு பவன் கல்யாண் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரின் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

நடிகர் சிரஞ்சீவி கட்சி நடத்தி சொதப்பிய நிலையில், சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரது தம்பி பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை நடத்தி தெலங்கானாவின் அடுத்த சிஎம் நான் தான் என பில்டப் செய்து வந்த நிலையில், தற்போது தோல்வியை தழுவியுள்ளார். இதில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 8 தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்து உள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சிக்கு இணையாக நோட்டாவுக்கும் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடதக்கது . மேலும் பவன் கல்யாண் சினிமாவில் ஜெயித்தது போல அரசியலிலும் ஜெயித்து விடலாம் என நினைத்தது எல்லாம் சரி தான் என்றும் ஆனால், தென்னிந்தியாவில் பாஜக உடன் கூட்டணி வைத்து தான் தப்பு செய்து விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய்யின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதை பார்க்கவும் முடிகிறது. நிர்வாகிகள் சந்திப்பு மட்டுமின்றி வாக்காளர்கள் விபரம் சேகரிப்பு, நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு பாராட்டு, பயிலகம் வரிசையில் நூலகங்களையும் தொடங்கியுள்ளது, விஜய் மக்கள் இயக்கம். இவை அனைத்திலும் 234 தொகுதிகளையும் குறி வைத்து களமிறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

இந்நிலையில் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்த பவன் கல்யாணின் தோல்வி அரசியல் ரீதியாக நடிகர் விஜய்க்கு பெரிய பாடமாக மாறி உள்ளது. பொதுவாக தெலுங்கு சினமா ரசிகர்கள் தமிழர்களை விட அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் பவன் கல்யாணுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட பவன் கல்யாணுக்கே அரசியல் ரீதியாக பெரிய தோல்வி ஏற்பட்டு உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் நீண்ட காலமாக அரசியல் செய்து வந்தும் கூட, டெபாசிட் பெறக்கூடிய அளவிற்கு கூட பவன் வெற்றிபெற முடியாதது பெரிய அரசியல் மெசேஜ். அதே நேரம் விஜய் கிடைக்கும் மேடையில் மட்டும் தான் அரசியல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. கூட்டணி வைத்தாலும் நடிகர்கள் வெல்வது இனி கடினம் என்பதை பவன் கல்யானின் பாஜக கூட்டணி தோல்வி காட்டி உள்ளது.

ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன்.. லோக்சபா தேர்தலில் அவர் தெற்கு கோவை தொகுதியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் டெபாசிட் இழந்தார். அப்படி இருக்க விஜய் அரசியலுக்கு வருவது சரியான முடிவாக இருக்காது. காரணம் சமூக வலைதளத்தில் லைக் போடும் ரசிகர்களும், தியேட்டரில் விசில் அடிக்கும் ரசிகர்களை நம்பி விஜய் அரசியலுக்கு வருவது பவன் கல்யாணுக்கு ஏற்பட்ட கதி தான் விஜய்க்கும் ஏற்படும் என விஜய்க்கு நெருக்கமானவர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதாகும் , இதனால் கடும் பீதியில் இருக்கும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் ஒரு வித அச்சமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.