மிக பெரிய சிக்கலில் விஜய்… பயத்தில் தெறித்து பின் வாங்கிய விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை, வழக்கம் போல் சென்னையில் நடத்தாமல், தென்மாவட்டங்களில் ஒரு இடத்தில் மாநாடு போன்று மிக பிரமாண்டமாக நடத்த படும் என்றும், இது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் மதுரையில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் லியோவின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதற்கு தயாராக இருந்த நிலையில்.

விஜய்க்கு அவருடைய நெருக்கமான வட்டாரத்திலிருந்து ஒரு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. அதில் விஜயின் அரசியல் நகர்வுகளுக்கு தற்போது இருந்தே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரையில் நடத்த திட்டமிட்டு இருந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் மிக கவனமாக நடந்து கொண்டாலும் கூட அவருடைய ரசிகர்கள் உணர்ச்சியில் சில அரசியல் கட்சிகளை சீண்டும் வகையில் போஸ்டரோ அல்லது வேறு ஏதாவது ஒன்றை ஆர்வ கோளாறில் செய்து விடுவார்கள்.

அப்படி செய்து அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டால், அப்படி விஜய் ரசிகர்களால் சீண்ட கூடிய அரசியல் கட்சி தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவே லியோ படத்திற்கு பின்னடைவாக கூட ஏற்பட்டு விடும் என்கின்ற ஒரு எச்சரிக்கையை விஜய்க்கு நெருக்கமான சிலர் தெரிவித்து இருந்திருக்கிறார்கள்.மேலும் ஏற்கனவே ஆளும் தரப்பை சீண்டும் வகையில் தலைவா பட போஸ்டரில் இடம் பெற்ற ஒரே ஒரு வரிக்காக தலைவா படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலையும் விஜய்க்கு நினைவு படுத்தியுள்ளார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

அந்த வகையில் எப்போதும் சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தும் விஜய், மதுரையில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம் என்கின்ற பெயரில் அதுவே தன்னுடைய படத்திற்கு ஆபத்தாக முடியும் வகையில் ரசிகர்கள் செயல்பாடு அமைந்துவிடும் என்கின்ற ஒரு அச்சத்தின் காரணமாக, மதுரையில் நடத்த திட்டமிட்டு இருந்த ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் .

இந்த நிலையில் நடிகர் விஜயின் லியோ படம் வெளியாகும் பொழுது எப்படி இருந்தாலும் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்து சர்ச்சை கூறிய வசனங்களுடன் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க முடியாது என்றும், ஆனாலும் கூட படம் ரிலீஸ் ஆகும் தேதியில் போஸ்டர் ஒட்டினால் அது சர்ச்சையாக உருவெடுத்து மிகப்பெரிய விவாதமாக மாறுவதற்கு நான்கு ஐந்து நாட்கள் ஆகும். அதற்குள் படம் நல்ல வசூலை வாரி குவித்து மக்கள் மத்தியில் ரீச் ஆகிவிடும்.

அதே மதுரையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் விஜய் ரசிகர்கள் நடந்து கொண்டால் அது படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது விவாத பொருளாக மாறுவதும் இல்லாமல், ஆளும் தரப்பினரை ஆத்திரமடைய செய்யும் வகையில் அமைந்துவிடும், அதுவே நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திய விடும் என்றும்.

ஏற்கனவே கடந்த ஆட்சி காலத்தில் சர்க்கார் படத்தில் ஆளுங்க கட்சியை சீண்டும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தது. இதனால் அப்போதைய ஆளுங்கட்சியினரால் சர்க்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வெளியில் வைக்கப்பட்ட விஜய் பேனர்கள் கிழித்து எறியப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. அந்த வகையில் மீண்டும் தற்போது இருக்கும் ஆளும் கட்சியை சீண்டி மிகப்பெரிய சிக்கலில் ஏற்படுத்தி அதுவே தன்னுடைய படத்திற்கு பின்னடைவாக அமைந்து விடும் என்கின்ற அச்சத்தில் மதுரையில் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருந்த நடிகர் விஜய் தற்பொழுது சற்று பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஏதாவது சிக்கலில் தன்னை சிக்க வைத்து விடுவார்கள் என்கின்ற அச்சத்தில் திடீரென்று மதுரையில் நடக்க வந்த ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்த அளவுக்கு அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதற்கு காரணமே நடிகர் விஜய் தான் என்றும்.

சும்மா இருந்த ரசிகர்களை நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரசிகர்கள் சந்திப்பு, பிரியாணி விருந்து என நேரில் அழைத்து உசுப்பேத்தி விட்டு, தற்போது அவருடைய படம் வெளியாக இருக்கும் நேரத்தில் ஏதாவது ரசிகர்களால் சர்ச்சை ஏற்படும் என்கின்ற அச்சப்படுவது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும், ஆகையால் வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் விஜய் ரசிகர்கள் இல்லை அவர்களை பின்னின்று, உசுப்பேத்தி விட்டு உண்முன்னு ஜம்முனு இருக்கும் நடிங்கர் விஜய் தான் என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செய்யுங்கள்.