விஜய்க்கு முக்கியத்துவம்.. சங்கருக்கு கட்டுப்பாடு விதித்த தில்ராஜ்.. கடும் அப்செட்டில் சங்கர் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் வாரிசு, இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தெலுங்கு திரைப்படத்தின் பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார். அஜித் நடிப்பில் வெளியாகும் துணிவு படம் மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாவதால் போதிய திரையரங்கு இல்லாமல் தவித்தது வாரிசு படம்.

அதேபோன்று பண்டிகை திருநாளில் தெலுங்கு சினிமாவில் தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் என்று அங்கே ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்க, அடுத்த ஒரு பிரச்சனையில் சிக்கியது வாரிசு. ஒரு பாடல் காட்சி சென்னையில் நடந்தது, அதில் விலங்கு நல வாரியத்துடன் அனுமதி பெறாமல் பல யானைகள், குதிரைகள், காளை மாடுகள் பயன்படுத்தியதாக விலங்கு நல வாரியம் வாரிசு படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் மேலும் ஒரு சிக்கலில் சிக்கியது வாரிசு படம். இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து அதில் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் விடுபட்டு, தற்பொழுது பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுக்குமே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாரிசு படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியானது, அடுத்த சில நாட்களில் துணிவு படத்தின் பாடல் காட்சி வெளியாகி பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது, இந்த இரண்டு பாடல் காட்சிகளும் அவரது ரசிகர்கள் மத்தியில் எந்த பாடல் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது என்கின்ற கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் புதிய படம் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ளதால், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சியை வெளியிட வேண்டும் என்று சங்கர் விரும்பியுள்ளார். விஜயின் வாரிசு படம் வெளியாக இருப்பதால் மேலும் விஜய் வாரிசு படத்திற்கான ப்ரமோஷன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால், தற்பொழுது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சியை வெளியிட்டால் அது வாரிசு படத்தின் ப்ரோமோசனுக்கு தடையாக இருக்கும்.

அதனால் சங்கரின் விருப்பத்திற்கு தடை விதித்துள்ளார் தில்ராஜ் என கூறப்படுகிறது. மேலும் வாரிசு படம் திரையிக்கு வெளியான பின்பு சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சியை ஒரு விழா போன்று எடுத்து வெளியிட வேண்டும் என்று தில்ராஜ் தெரிவித்துள்ளது சங்கருக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருநங்கைகள் அட்டகாசம்.. கடும் அச்சத்தில் பொதுமக்கள்..