விஜயை ஒரு கை பார்த்து விடுகிறேன்… சவால் விட்டு களம் இறங்கும் சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

அமரன் வெற்றிக்கு பின்பு சிவகார்த்திகேயனின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இது அவருக்கே நல்லதில்லை என சினிமா வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள், ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் சினிமாவில் என்றி கொடுத்து மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உயரத்தை அடைந்தார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொகுப்பாளராக தன்னுடைய நகைச்சுவையால் மக்களை கவர்ந்த நிலையில் அவர் மெரினா என்கின்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, அடுத்தடுத்து காமெடி கலந்த கதையில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது, காரணம் ஆக்சன் ஹீரோவாக அவர் காக்கிச்சட்டை சீமா ராஜா போன்ற படங்களில் முயற்சி செய்தாலும் அது அனைத்துமே தோல்வி அடைந்தது.

அந்த வகையில் சிவகார்த்திகேயனை மக்கள் காமெடியனாகத்தான் பார்த்தார்கள் தவிர அவரை ஆக்சன் ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி மெல்ல வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு நேரமும் கை கொடுத்தது அந்த வகையில் அமரன் படம் ஆக்சன் ஹீரோவாக மிக பெரிய வெற்றியை பெற்றது.இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் என்றி கொடுக்க இருக்கும் நிலையில் சினிமாவிலிருந்து விலகுவதாக முடிவு செய்தார் விஜய்.

தற்பொழுது விஜய் நடித்து வரும் ஜனநாயகம் படம் தான் கடைசி படம், இந்த நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட சிவகார்த்திகேயன். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் விஜய் நடித்த கோட் படத்தில் தனக்கு ஒரு சிறிய காட்சி நடிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி விஜயுடன் ஒரு காட்சியில் வந்து செல்கிறார் சிவகார்த்திகேயன்,

இதற்கு முக்கிய காரணம் விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் விஜய் ரசிகர்கள் தன்னுடைய படத்தை திரையில் கொண்டாடுவார்கள் என்கின்ற ஒரு பேராசை தான் ஆனால் விஜய் முதுகில் குத்தும் வேலையில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது கோட் படத்தில் விஜய்யிடம் துப்பாக்கியை வாங்கி, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும், நீங்க போங்க நான் பார்த்துகிறேன் என்று சொன்ன சிவகார்த்திகேயன், தற்பொழுது அந்த துப்பாக்கியை விஜயை நோக்கி திருப்ப தொடங்கியுள்ளார்.

விஜய் நடிக்கும் ஜனநாயகம் படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் பின்னணியில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இருப்பதாக கூறப்படும் நிலையில், பராசக்தி படம் ரிலீஸ் க்கு தியேட்டர் பிரச்சனை இருக்காது அந்த வகையில் ஒரு கை விஜயை பார்த்து விடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

மேலும் விஜய் படம் வெளியாகும் அதே தேதியில் பராசக்தி படம் ரிலீஸ் ஆக இருப்பது, சிவகார்த்திகேயன் விருப்பம் இல்லாமல் நடக்காது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரிடம், விஜய் சார் படத்துடன் தன்னுடைய படம் மோதுவது சரியாக இருக்காது, அவர் கையில் துப்பாக்கியெல்லாம் வாங்கியிருக்கேன், என்று சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தால் வேறு ஒரு தேதியில் பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்படலாம்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, விஜய் உடன் மோதி வெற்றி பெற்று விட்டால், அடுத்து விஜய் அரசியலுக்கு வேற செல்கிறார், அஜித் கார் ரேஸ் சென்று விட்டார், ரஜினிக்கு வயதாகி விட்டது, நான் தான் அடுத்த டாப் 1 நடிகராக வலம் வரலாம் என்கிற பேராசையில் விஜய்யுடன் மோத இருக்கும் சிவகார்த்திகேயன் நிலை என்னவாகும் என்பது போக போக தான் தெரியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here