இது மட்டும் நடந்தால் ஒரு பக்கம் மீசையை எடுத்துக்குறேன்… விஜய்க்கு சவால் விட்ட பிரபல நடிகர்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விஜய்க்கும் ரஜினிக்கும் இடையேயான போட்டி பெரிய பனிப்போராக இருந்து வருகிறது. இரு தரப்பிலும் எந்தவொரு பதிலும் சொல்லாத நிலையில் ரசிகர்களை தூண்டி விடும் சில சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

தற்போது தமிழ் சினிமாவில் 600 கோடி வசூல் செய்துள்ள படங்கள் பட்டியலில் ஜெயிலர் திரைப்படம் இணைந்துள்ளது. 2.0 படத்திற்கு பின் 600 கோடி வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படமாக ஜெயிலர் படம் தான் உள்ளது. இதன் மூலம் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள நாயகன் தமிழ் சினிமாவில் ரஜினி மட்டும் தான். வசூல் நாயகன் ரஜினிகாந்த் சில தடுமாற்றகளை அடைந்தாலும் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு எடுத்துக்காட்டாக ப்ளாக்பஸ்டர் நாயகனாக பலகோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

2023 ஆகஸ்ட் 10ல் உலகமெங்கும் வெளியான ஜெயிலர் திரைப்படம், தற்போது 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. வெற்றிகரமாக திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் 25 நாட்கள் கடந்துள்ள ஜெயிலர், இமாலய வெற்றி படைத்து சாதனை படைத்திருக்கிறது. வசூல் ரீதியாக இப்படம் 600 கோடிகளை கடந்துள்ள நிலையில், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மெகா பிளாக்பஸ்டர் படமாக வாகை சூடியுள்ளது.

இந்த நிலையில் ஜெய்லர் படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 600 கோடியை நெருங்கி விட்டதால் அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லியோ படமும் களமிறங்க இருக்கிறது. அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் உலகமெங்கிலும் ரிலீஸ் ஆகின்றது. அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் கூடிய சீக்கிரம் தொடங்கப்படும்.

பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவுகள் பட ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் தொடங்கும். ஆனால் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10 ஆம் தேதியே தொடங்க இருக்கிறதாம். அதுவும் கனடா மற்றும் யுகே போன்ற நாடுகளில் இந்த மாதிரி முன்பதிவை நடத்த இருக்கிறார்களாம். ஏனெனில் ஜெய்லர் படத்திற்கு வெளி நாடுகளில் தான் கலெக்‌ஷன் அதிகமாக அள்ளியது. அதை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செப்டம்பர் மாதமே முன்பதிவை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்த நிலையில் தான் தற்போது ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் லியோ படத்தால் ஜெயிலர் பட வசூலை முறியடிக்க இயலாது ன்று கூறியுள்ளார். இவர் ரஜனிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். இவர் கூறுகையில், “விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் பெரிய ஹிட் கொடுத்தாலும் அவை ரஜினிகாந்தின் 2.0விற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அப்படி ஒரு வெற்றியை கொடுத்த ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டதற்கு விஜய் ஆசைப்படலாமா. கடந்த வருடங்களில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பீஸ்ட், சர்க்கார் போன்ற படங்கள் அதிக வசூல் என்று கூறப்பட்ட நிலையில் அவை 200 கோடி வரை வசூல் செய்தன நிலையில் அதை தவிர பெரிய சாதனையை விஜய் செய்யவில்லை.

ரஜினிகாந்தின் 800 கோடி வசூலை ஏற்படுத்திவிட்டு விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசலாம். என்றுமே ரஜினி ஒருவர்தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார். லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு லியோ திரைப்படம் வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம்.” என்று பேசியுள்ளார்.

மேலும், “தயவு செய்து விஜய் சாருக்கும் ரஜினி சாருக்கும் போட்டி என்று சொல்லாதீர்கள். ரஜினி சார் எங்கோ மலையில் இருக்கிறார் நீங்கள் ரஜினி சாருக்கும் கமல் சாருக்கும் போட்டி என்று கூட சொல்லுங்கள் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். விஜய் சாருக்கும் ரஜினிக்கும் போட்டி என்று சொல்லாதீர்கள் காரணம் ரஜினிகாந்தை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய்.” என்றும் கூறியுள்ளார்.