வாரிசு படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உதயநிதி வைத்த செக்..பொறுமை இழந்த விஜய்.!

0
Follow on Google News

பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாட்களில் அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகிறது, இதனால் இரண்டு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெற்று தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

இதே போன்று வாரிசு படத்தையும் வாங்கி வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் நடிகர் விஜய் தரப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இப்படத்தை கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்ததால் இப்படம் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ்க்கு கொடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிடுவதற்கு ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள்.

இதனால் வாரிசு படத்திற்கு போதிய திரையரங்குகள் இல்லாமல் மிகக் குறைந்த திரையரங்குகளில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற முடிந்த நிலையில். வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் அவதார் 3 படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

ஏற்கனவே அவதார் இரண்டு பாகங்கள் வந்து மிகப் பெரிய ஹிட் அடித்தது, அதனால் அவதார் 3 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. ஆனால் வாரிசு படத்தை வெளியிடும் திரையரங்குகளில் அவதார் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று ரெட் ஜெயண்ட்ஸ் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளதால், மேலும் துணிவு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு மட்டுமே அவதார் படத்தை ரிலீஸ் செய்யப்படும் என்று ரெட் ஜீன்ஸ் மூவிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தற்பொழுது வாரிசு படத்தை வெளியிடும் திரையரங்கு உரிமையாளர்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு எதிராக போர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இருந்து தலைவா படம் வெளியாவதற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

அந்த சூழலில் விஜய் கைகட்டி படம் வெளியாவதற்காக ஜெயலலிதாவிடம் பவ்யமாக பேசி வீடியோ வெளியிட்டார். ஆனால் இம்முறை அந்த அளவுக்கு பணிந்து போக மாட்டார் விஜய் என்றும், உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கைகளால் தொடர்ந்து தன்னுடைய வாரிசு படம் சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வருவதை உணர்ந்து, பொறுமை இழந்தவரும் நடிகர் விஜய் 2026 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தான் யார் என்பதை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.