விஜய்க்கு தணிக்கை குழு வெச்ச ஆப்பு… கோட் படம் ரிலீஸ் அவதில் சிக்கல்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் படம், இன்னும் 10 நாட்களில் திரைக்கு வருகிறது. விஜய் நான்கு வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி கோட் படத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் சிறப்பு தோற்றங்களில் வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதோடு இதுவரை எந்த படத்திலுமே, ஒரு பாடலுக்கு என தனியாக குத்தாட்டம் போடாத நடிகை திரிஷா, தனது நெருங்கிய நண்பர் விஜய்க்காக, அவருடன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்நிலையில் தான் கோட் படத்தில் எல்லாமே பக்காவாக ரெடியாகி, ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது தணிக்கைக்குழு, இப்படத்திற்கு சில முட்டுக்கட்டைகளை போட்டு, ரிலீசாவதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

கோட் படத்திற்கு கடந்த வாரம் தான் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 59 நிமிடம் 39 வினாடிகள் என குறிப்பிட்டு படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராகவும் இருந்தது. ஆனால் தற்போது முதலில் சென்சிருக்கு அனுப்பப்பட்ட கோட் படம், எந்த சிக்கலுமின்றி யூஏ சான்றிதழ் வாங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக, மீண்டும் சென்சார் குழு படத்தை செக் செய்தபோது, அதில் பல காட்சிகளை நீக்க சொல்லி இருக்கிறது.

மேலும் பல காட்சிகளை வேறு விதமாக மாற்றவும் உத்தரவிட்டிருக்கிறது. இதையெல்லாம் செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே லியோ படத்தில் எப்படி, நான் ரெடி தான் பாடலுக்கு பல எதிர்ப்புகள் வந்து அந்த படத்தின் பாடலில் பல வரிகளை நீக்கினார்களோ, அதே போல் தற்போது கோட் படத்தில் பல காட்சிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் முதல் பிரச்சனையே விஜயின் பெயர்தான். காந்தி என பெயர் வைத்துக்கொண்டு விஜயை குடிகாரராக காட்டியிருக்கிறார்கள் என டிரைலர் ரிலீஸ் ஆன போதே பிரச்சனை எழுந்தது. அதற்கு வெங்கட் பிரபு காந்தி என பெயர் வைத்தவர்கள் குடிக்க மாட்டார்களா? என் நெருங்கிய நண்பரின் பெயரும் காந்திதான், அவன் பயங்கர குடிகாரன் என விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் சென்சார் குழு படத்தில் தேசத்தந்தை வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது.

மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளையும் நீக்க சொல்லி இருக்கிறது. அதோடு படத்தில் பெண் ஒருவர் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன் காட்சியையும் நீக்க சொல்லி இருக்கும் சென்சார் குழு, ஒரு காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மதுபானத்தின் பெயரையும் எடுக்கச்சொல்லி இருக்கிறது. அத்துடன் படத்தில் மது, புகையிலை காண்பிக்கப்படும் இடங்களில் மது, புகையிலை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தொடர்பான வாசகங்களை இடம் பெற அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கூடவே, கழுத்தை அறுப்பது போன்ற காட்சி ஒன்றை சுருக்குமாறு கூறியிருக்கும் சென்சார் குழு, படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தமிழில் போடவும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த திருத்தங்களின் படி கோட் படத்தில் சென்சார் குழு 00.03 நிமிடங்களை நீக்க கூறி இருக்கிறது. இந்நிலையில் தான் இந்த காட்சிகளை எல்லாம் நீக்கினால் தான் படம் வெளியாகும் என தணிக்கை குழு முட்டுக்கட்டை போட்டதால், படக்குழுவினர் அவசர அவசரமாக பல காட்சிகளை நீக்கியும் சேர்த்தும் வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது படம் கடைசியில் 3 மணி நேரம் 3நிமிடமாக டைம் அதிகமாகியிருப்பதால், அவ்வளவு நேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.