விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்படப் போவதாக ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார்.
மேலும், ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ’தளபதி 69’ படம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் கடந்த ஒரு சில மாதங்களாக இருந்து வந்தது.
பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் எச்.வினோத் தான் தளபதி 69 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என கிட்டத்தட்ட உறுதியானது. இருந்தாலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றளவும் வெளியாகவில்லை. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 69 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது. மேலும் ஜூலை மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் தளபதி 69 முடிவடையும் என்றும் சொல்லப்பட்டது.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், விஜய் தரப்பிலிருந்தோ அல்லது படக்குழு தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நடிகர் விஜய் – சமந்தா காம்போ தெறி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகிய நிலையில், தற்போது தளபதி 69 படத்திலும் அந்த காம்போ எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். மயோசைட்டிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சினிமா வாய்ப்புகளை அதிகளவில் இழந்த நடிகை சமந்தா மீண்டும் அதிலிருந்து குணமாகி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கோடி செலவு செய்து தான் கற்றுக் கொண்ட மாற்று மருந்துகளின் பலன்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன் என அவர் பதிவிட்ட போஸ்ட்டுகள் அவருக்கு எதிராக மாறி விட்டன.
தி லிவர் டாக் என சோஷியல் மீடியாவில் மருத்துவ குறிப்புகளை கூறி வரும் மருத்துவர் எபி பிலிப்ஸ் சமந்தாவின் பதிவை கண்டித்து அவரை கைது செய்ய வேண்டும் என்றே பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை சமந்தாவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அவரது இந்தப் பரிந்துரையைக் கண்டித்தும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிட்டும் வல்லுநர்கள் பதிவிட்டுள்ளனர்.
நடிகை சமந்தா ஏன் திடீரென மருத்துவ குறிப்புகளை எல்லாம் கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொள்கிறார் என்கிற கேள்வி சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவால கட்டா மாற்று மருத்துவத்தை முயற்சிக்க சொல்லும் நடிகர்கள் நோயாளிகளின் உயிர் போனால் திருப்பிக் கொடுப்பார்களா எனக் கேட்டிருந்தார். சமந்தா சர்ச்சையில் சிக்கி உள்ளதை அடுத்து, தளபதி 69 படத்தில் அவருக்கு பதில் திரிஷாவை ஒப்பந்தம் செய்யுங்கள் என விஜய் தரப்பில் இருந்து இயக்குனரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.