அய்யோ… இனிமேல் நான் உங்களுக்கு அடிமை…. மிரட்டலுக்கு பயந்து அந்தர் பல்டி அடித்தாரா விஜய்..

0
Follow on Google News

நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நீட் தேர்வு குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி என்பது தமிழக்த்தில் ஆளும் திமுக எதிராக இருக்கும் என்று, வரும் தேர்தலில் திமுகவுக்கு மிக பெரிய பதிப்ப்பை விஜய் அரசியல் ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில், தமிழக அரசு சட்டசபையில் கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் பேசினார்.

மேலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு இருந்தது, விஜய் நேரடியாக பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டார், அதே நேரத்தில் திடீரென திமுக அரசுக்கு விஜய் ஆதரவு கொடுப்பதின் பின்னணி என்ன.? என்கிற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் விஜய் மிரட்டப்பட்டார் என்றும், அதனால் தான் ஆளும் அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது விஜயின் நீலாங்கரை வீடு கடற்கரையில் இருந்து மிக அருகில் இருப்பதால், இது சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அதனால் விஜய் கள்ளகுறிஞ்சி சாராய விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது போன்று, தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக, பேசிக் கொண்டிருந்தால் விஜய் வீட்டை இடித்து விடுவோம் என ஆளும் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாகவும்,

அதனால்தான் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் இப்படி அந்தர் பல்டி அடித்து ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக, நீட் தேர்வுக்கு எதிராக பேசியதாக சில அரசியல் விமர்சகர் தெரிவித்திருந்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, மேலும் இதை நம்ப முடியாமலும் இல்லை , காரணம் நடிகர் விஜயகாந்த். அரசியல் என்ட்ரி கொடுத்தபோது, கோயம் பேட்டில் உள்ள அவருடைய திருமண மண்டபம் இடிக்கப்பட்டது.

அதாவது திமுக அரசு தான் என்னுடைய மண்டபத்தை இடித்தது என்று நடிகர் விஜயகாந்து நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார், மேலும் அந்தப் பாலம் விஜயகாந்த் மண்டபத்தை இடிக்காமலும் கட்டப்பட்டிருக்கலாம் ஆனால் அந்த மண்டபத்தை இடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாலம் அமைப்புகள் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தது.

ஆனால் விஜயகாந்த் மண்டபத்தை பாலம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது போல் விஜயின் நீலாங்கரை வீடு இடிக்கப்படுமா என்றால் அதற்கு சாத்தியம் இல்லை. காரணம் விஜயின் வீடு இருக்கும் நீலாங்கரை வீட்டில் அருகில் பல வீடுகள் உள்ளது. குறிப்பாக விஜய் வீட்டை விட இன்னும் கடற்கரை அருகில் பல பங்களாக்கள் உள்ளது. குறிப்பாக நடிகர் விஜயின் வீட்டின் அருகிலேயே பாரதிராஜாவிடம் உள்ளது.

மேலும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் விடும் நீலாங்கரையில்தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் வீடை மட்டும் எப்படி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக இடிக்க முடியும். அந்த வகையில் விஜய் வீட்டை இடிக்க போகிறோம் என்று மிரட்டி விஜயை அடி பணிய வைப்பதற்கான வாய்ப்பு எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் வேறு ஏதோ ஒரு வகையில் விஜய் மிரட்டப்பட்டிருக்கலாம். தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படம் வெளியாகும் போது சிக்கலை ஏற்படும் என்று கூட மிரட்டப்பட்டிருக்கலாம், அதற்கு விஜய் பயந்து கொண்டு தமிழக அரசுக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிராக விஜய் பேசியிருக்கலாம் ஆனால் விஜய் வீட்டை இடிக்க போவதாக மிரட்டியது என்பதெல்லாம் சாத்தியமில்லை என கூறப்படுகிறது.