நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. முதலில் ஒன் லைன் ஸ்டோரி கேட்டுவிட்டு விக்னேஷ் சிவனை கமிட் செய்த அஜித், சுமார் 6 மாதம் விக்னேஷ் சிவன் முழு கதையையும் தயார் செய்து படப்பிடிப்பு தொடங்க சில நாட்களுக்கும் முன்பு அஜித்திடம் தெரிவிக்க, எனக்கு கதை பிடிக்கவில்லை என இயக்குனர் விக்னேஷ் சிவனை வெளியேற்றி வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்தார் அஜித்.
விக்னேஷ் சிவனுக்கு நடந்த இந்த சம்பவம், முன்னனி நடிகர்களை வைத்து படம் இயக்கும் பல இயக்குனர்களுக்கு மிக பெரிய அச்சத்தை தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் ஒரு இயக்குனர் கமிட்டாகி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பின்பு இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இயக்குனர் மாற்றம் என்பது நடந்தது இல்லை.
அந்த வகையில் அதிகாரபூர்வமாக அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவது உறுதி செய்யப்பட்ட பின்பு, இயக்குனர் மாற்றம் செய்தது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு அஜித் கமிட்டானது, போன்று, தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளார் விஜய்.
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு இந்த படத்தின் முழு கதையையும் தயார் செய்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு விஜய் உத்தரவு போட்டுள்ளார். பொதுவாக ஒரு நடிகர் தான் நடிக்கும் படத்தின் தன்னுடைய கேரக்டரை மட்டும் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு கதையை ஓகே செய்துவிடுவார். ஆனால் வெங்கட் பிரபு இயக்கம் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் கார்டு முதல் எண்டு கார்டு வரை அணைத்து கேரக்டர் உட்பட முழு படத்தின் ஸ்கிரிப்ட் வேண்டும் என விஜய் தெரிவித்து விட்டாராம்.
இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் போன்று வெங்கட் பிரபு எதாவது சொதப்பி விட கூடாது என்கிற முன்னெச்சரிக்கையாக தான் விஜய் இவ்வாறு ரெம்ப ஸ்டிக்ட்டாக இருக்கிறாராம். அந்த வகையில் இது தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு புது வகையான முன்னுதாரணமாக இருக்கிறத. இந்த நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவனை அஜித் தன்னுடைய படத்தில் கமிட் செய்துவிட்டு பின்பு கதை பிடிக்கவில்லை என்று கழட்டி விட்டது போன்று விஜய் நம்மை கழட்டி விடுவாரோ என்கின்ற அச்சம் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய உதவி இயக்குனர்கள் மூலம் தொடர்ந்து புதிய படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் வெங்கட் பிரபு, ஆனால் இந்த படத்திற்கான கதை இன்னும் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது, நடிகர் விஜயிடம் ஒன் லைன் ஸ்டோரியை தெரிவித்து விட்டு கமிட்டான வெங்கட் பிரபு, தற்பொழுது அந்த கதையை முழுமை படுத்த முடியாமல் திணறி வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது தயார் செய்து கொண்டிருக்கும் இந்த கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வது என்கின்ற இரண்டாம் தேர்வையும் தயாராக வைத்துள்ள வெங்கட் பிரபு, பிறமொழி படங்களில் கதையை வாங்கி டப்பிங் செய்யலாமா.? என அதற்கான சில டப்பிங் கதைகளையும் தேர்வு செய்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு செப்டம்பர் மாதம் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என விஜய் திட்டமிட்டுள்ளதால், தற்பொழுது அந்த படத்தின் கதையை முழுமைப்படுத்த முடியாமல் வெங்கட் பிரபு திணறி வருகிறார். இந்த நிலையில் வெங்கட் பிரபு இதற்கு முன்பு இயக்கிய படங்களில் இவ்வளவு சீரியஸாக அவர் பணியாற்றியதாக இல்லை என்றும், அந்த வகையில் தற்போது மிகவும் சீரியஸாக விக்னேஷ் ஏற்பட்டது தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிக சீரியஸாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.