விஜய் பட இயக்குனரின் வாய் கொழுப்பு.. தரமான பதிலடி கொடுத்த அஜித் பட இயக்குனர்..!

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில், தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது வாரிசு திரைப்படம்.

ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ வைத்து எப்படி படம் எடுக்க வேண்டும் என்கின்ற ஒரு திட்டமிடல் இல்லாமல் மெகா சீரியலை வம்சி எடுத்து வைத்துள்ளார் என்கின்ற விமர்சனம். இது போன்ற கதையை எப்படி விஜய் தேர்வு செய்கிறார் என்கின்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில் வம்சி அளித்த பேட்டி மேலும் சினிமா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. சமீபத்தில் வம்சி ஒரு பேட்டியில் கூறுகையில்

எப்படி சீரியல் என்று வாரிசு படத்தை சொல்லலாம், ஒரு படத்தை உருவாக்க எத்தனை கலைஞர்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களுள் ஒருவரான விஜய் எவ்வளவு தியாகம் செய்து கஷ்டப்பட்டுள்ளார்கள் தெரியுமா ? சுலபமாக கேலி செய்கிறார்கள் சீரியல் என்று, முதலில் ஏன் சீரியலை தரக்குறைவாக பேசுகிறீர்கள், அதுவும் ஒரு கிரியேட்டிவ் துறை தான்.

போய் பாருங்கள் உங்கள் வீட்டில் அம்மா, சித்தப்பா என எத்தனை பேர் அந்த சீரியலை பார்க்கிறார்கள், என்னுடைய சாப்ட்வேர் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இத்துறைக்கு வந்து கமர்ஷியல் சினிமா மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைக்க வேண்டுமென மட்டுமே எண்ணி வாரிசை உருவாக்கினேன், என வம்சி தன்னுடைய வாரிசு படத்தை விமர்சனம் செய்த்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில்,

அதற்கு நீ சீரியல் மாதிரி படம் எடுத்தால் அதை சீரியல் என்று தான் விமர்சனம் செய்வார்கள். என்னமோ இவர் கஷ்ட பட்டு படம் எடுக்கிறார், மற்ற துறையினர் சொகுசாக இருப்பது போன்று பேச கூடாது. நீங்க எடுக்கும் படத்தை, நாங்க கஷ்ட பட்டு சம்பாரித்த பணத்தில் படம் பார்க்கும் போது , அது எங்களை திருப்தி படுத்தவில்லை என்றால் விமர்சனம் செய்ய தான் செய்வாம் என சினிமா ரசிகர்கள் பதிலளிக்க மறுபக்கம் வம்சிக்கு பதிலடி தரும் விதத்தில் அஜித் நடித்த துணிவு படத்தின் இயக்குனர் H.வினோத் பேட்டி ஓன்று வைரலாகி வருகிறது,

அந்த பேட்டியில் எச் வினோத் பேசும்போது, நான் ஒரு படம் இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என நினைப்பேன் ஆனால் மற்றவர்கள் என்னைவிட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.