800 கிலோ ஸ்வீட், 500 கிலோ மீன், 300 லாரி, விஜய் பட டான்ஸ் மாஸ்டர் அட்டூழியம்.. அதிர்ச்சியில் பட குழுவினர்.

0
Follow on Google News

சினிமா துறையில் இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு, எந்த ஒரு சிரமத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஆனால் சினிமா வாய்ப்பு கிடைத்து, ஒரு சில படங்கள் ஹிட் அடித்து விட்டால், அவர்கள் நடவடிக்கைகள் அப்படியே தலைகீழாக மாறும். காஸ்டியூம் சரி இல்லை, தனி கேரவன், மேக்கப் மேன் சரியில்லை, இப்படி தயாரிப்பாளர்களுக்கு பல குடைச்சலை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பொதுவாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தான் இது போன்று நடந்து கொள்வார்கள் என்கின்ற நிலை மாறி படத்தின் டெக்னீஷன்கள் கூட இது போன்று செயல்பட தொடங்கியுள்ளார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலின், டான்ஸ் மாஸ்டர் ஜானி, அந்த ஒரு பாடல் ஹிட் கொடுத்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் தலைகீழாக மாறியுள்ளது.

தற்பொழுது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி நடனம் அமைத்து வருகிறார். டான்ஸ் மாஸ்டர் ஜானி கோவில்பட்டியில் படக்குழுவினரை கடுமையாக டார்ச்சர் செய்து வருகிறார். இந்த அட்மாஸ்பியர் சரியில்லை, அட்மாஸ்பியர் செட் ஆவதற்கு 500 கிலோ மீன் வேண்டும்.

மேலும், 800 கிலோ ஸ்வீட் வேண்டும், 300 லாரி வேண்டும், அப்பொழுதுதான் இந்த பாடலுக்கு அட்மாஸ்பியர் சரியாக இருக்கும் என்று படக்குழுவினரை படாதபாடு படுத்தி வருகிறார். இதனால் கோவில்பட்டி சுற்றுவட்டார பாகுதிகளில் படக்குழுவினர் அலைந்து ஸ்வீட் மீன் மற்றும் வாடகைக்கு லாரி என்று அனைத்தையும் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இது தேவையற்ற செலவு என தயாரிப்பாளர் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.