இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடித்துள்ளது, இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் சென்னையில் படமாக்கப்பட்டு அடுத்த கட்ட படபிடிப்புக்காக ஒட்டுமொத்த பட குழுவும் காஷ்மீர் சென்றது. நடிகர்கள் மட்டுமின்றி சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து சென்றனர்.
இந்த நிலையில் மிக மகிழ்ச்சியுடன் காஷ்மீருக்கு தனி விமானத்தில் சென்ற பட குழுவினர், அங்கே இறங்கிய பின்பு தான் கடும் குளிரில் குளிர் காரணமாக மிகப்பெரிய சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் கடும் குளிர் காரணமாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் இதற்கு காரணம் அதிகாலை கடும் குளிர் காலமாக கேமராவில் நினைத்தது போன்று காட்சிகள் படமாக்கப்பட முடியவில்லை என்பதால் ஒவ்வொரு நாளும் மிக பனி விலகும் வரை காத்திருந்து மிக தாமதமாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
லியோ படத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிகைகள் தங்களுடைய காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் காஷ்மீரில் இருந்து உடனே அப்பாடா தப்பித்தோம் என சென்னை திரும்பினார்கள். ஆனால் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருவதால் கடும் குளிருக்கு மத்தியில் காஷ்மீரிலேயே தங்கி தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒத்துழைப்பை கொடுத்து வந்துள்ளார் விஜய்.
இந்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் முடித்துவிட்டு அடுத்த அடுத்து 10 நாட்கள் தொடர்ந்து சென்னையில் படபிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 20 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை லோகேஷ் கனகராஜ் செய்து வந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் அழைத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்பொழுது ஏற்கனவே காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் பட குழுவினர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
அந்த வகையில் மீண்டும் ஒரு அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம், முடிந்தளவு சென்னையிலே மீதமுள்ள காட்சிகளை எடுத்து விடலாம், மேலும் ஹைட்ராபாத்தில் செட் அமைத்து படமாக்கப்படும் காட்சிகளை சென்னையிலே செட் அமைத்து படப்பிடிப்பை முடித்து விடலாம். இதனால் படகுழுவினர் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படாது என்ன நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதால், சென்னையில் உள்ள சினிமா தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என விஜய் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் லோகேஷ் கனகராஜ் அடுத்த கட்ட லியோ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து சென்னையில் நடத்துவது குறித்து யோசித்து வந்துள்ளார்.இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ஸ்டூடியோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் தினமும் பிரசாந்த் ஸ்டுடியோ வெளியில் விஜய் வரும்வரை காத்திருக்கிறார்கள்.
மேலும் விஜய் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது விஜயின் காரை பின்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் செல்வது, விஜய் செல்லும் காரை கைகளால் தட்டுவது இப்படி தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய்யை சந்தித்த லோகேஷ், தற்பொழுது ஸ்டூடியோ உள்ளே படமாக்கப்படுவதில் கூட உங்களுடைய ரசிகர்களால் மிக மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய இருக்கு.
இந்நிலையில் சென்னை அருகே ஏதாவது ஒரு இடத்தில் செட் அமைத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும் போது ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அதனால் படப்பிடிப்புக்கும் மிகவும் சிரமமாகும், அதனால் சென்னையில் படமாக்கப்படுவது என்பது சரியாக இருக்காது. ஹைதராபாத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்குவோம் என விஜய்யிடம் பேசி கன்வின்ஸ் செய்துள்ளார் லோகேஷ் கண்ணராஜ்.
அதன்படி விஜயும் ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கட்டும் என தெரிவித்துள்ளார், இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் அட்டூழியத்தால் சென்னை நடக்க வேண்டிய படப்பிடிப்பு ஹைட்ராபாத்திற்கு செல்ல இருக்கிறது இதனால் சென்னை உள்ள சினிமாத் தொழிலாளர்கள் பலருக்கும் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.