சம்பளம் கொடுக்காமல் ஊழியர்கள் ஏமாற்று… விஜயின் ஜனநாயகம் படப்பிடிப்பு நிறுத்தம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகம் படம் பாதியிலே நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னால் அந்த படத்தில் நடித்த ஊழியர்களின் கண்ணீர் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் நடிக்கும் படத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது என்பது புதியது கிடையாது. விஜய் நடித்த புலி படத்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கு இருந்த சம்பள பாக்கி, தொடங்கி, மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் மேன் க்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியது, தற்பொழுது ஜனநாயகம் படத்தில் பணியாற்றிய ஊழியர்களின் சம்பள பாக்கி வரை, விஜய் நடிக்கும் படம் என்றாலே ஊழியர்கள் வயித்தெறிச்சல் இல்லாமல் இருக்காது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகம் படத்தில் பணியாற்றிய தின கூலி ஊழியர்களின் சுமார் 25 நாள் சம்பள பாக்கி கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து, தற்பொழுது ஜனநாயகம் படத்தில் பணியாற்றிய ஊழியர்கள், சம்பள பாக்கியை கொடுத்தால் தான் அடுத்து வேலை செய்வோம் என தெரிவிக்க, விஜய் நடித்து வரும் ஜனநாயகம் படம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 45 நாள் படப்பிடிப்பு இருக்கும் நிலையில், படத்தை முடித்துவிட்டு மொத்தமாக சம்பளம் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்த்தால், நம்மை ஏமாற்றி விடுவார்கள் , அதனால் தற்பொழுது உள்ள பாக்கி சம்பளத்தை பெற்று கொண்டு, அடுத்து வழக்கம் போல் தினம் தினம் பேட்டாவை வாங்கி விட வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் உறுதியாக இருப்பதால், இன்னும் விஜய் நடிக்கும் ஜனநாயகம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க படாமலே உள்ளது.

அதே நேரத்தில் ஊழியர்கள் சம்பளம் பாக்கி குறித்து வாயே திறக்காத விஜய், கண்டும் காணாமல் இருந்து வரும் நிலையில், விஜய்யின் இந்த செயலுக்கு விஜய் காந்த் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த செயல் தற்பொழுது விஜய்க்கு சம்பட்டி அடியாக இருக்கும் அது என்ன செயல் என்பதை பார்ப்போம். விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரியின் திரைப்படம் மைசூரில் உள்ள பிருந்தாவனம் கார்டனில் நடந்து வருகிறது,

தொடர்ந்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது, தயாரிப்பாளர் இடமிருந்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு பணமும் வரவில்லை. இதனை தொடர்ந்து டெய்லி பேட்டாவுக்கு வேலை செகின்றவர்களுக்கு தயாரிப்பு நிர்வாகத்தில் இருப்பவர்களால் பணம் கொடுக்கவில்லை, இதனால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார்கள் அந்தப் படத்தில் பணியாற்றிய டெய்லி டேட்டாவிற்கு வேலை செய்த ஊழியர்கள்.

இப்படி ஒரு சூழலில் மூன்றாவது நாள் படப்பிடிப்பு தொடங்குகிறது. விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார், சுற்றி இருக்கும் ஊழியர்களின் முகத்தில் ஒரு சோகம், தன்னுடைய படப்பிடிப்பில் ஏன் பெரும்பாலான சோகமாக இருக்கிறார்கள் என்று ஒருவரை அழைத்து கேட்கிறார் விஜயகாந்த், இரண்டு நாள் வேலை செய்த பேட்டா இன்னும் வரவில்லை எங்களுடைய கை செலவு கூட கஷ்டமாக இருக்கிறது என்று ஒருவர் தெரிவிக்கிறார்.

உடனே தயாரிப்பு நிர்வாகிகளை அழைத்து சத்தம் போடுகிறார் விஜயகாந்த், தயாரிப்பாளரிடமிருந்து பணம் வரவில்லை என்றால் என்னிடம் சொல்ல வேண்டியது தானே, ஏன் இப்படி பண்றீங்க இந்தாங்க பிடி என்று, தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த 12 பவுன் செயினை அந்த தயாரிப்பு நிர்வாகி இடம் கொடுத்து இதை எங்கேயாவது அடகு வைத்துவிட்டு இங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணத்தை கொடுங்கள். தயாரிப்பாளர் பணம் கொடுத்த பின்பு இந்த செயினை எனக்கு திருப்பித் தாருங்கள் என்று விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார், ஆனால் இன்று ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் அவருடைய படத்தின் ஊழியர்கள் சம்பள பாக்கி குறித்து கண்டு காணாமல் இருப்பது, இவர் தான் நாட்டை திருத்த போகிறாரா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here