நம்பர் ஒன் இடத்தை பிடிக்க விஜய் செய்த டுபாக்கூர் வேலை… புட்டு புட்டு வைத்த சினிமா பிரபலம்…

0
Follow on Google News

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இதுவரை ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார்களை பரிசாக வழங்கினார்.

மேலும் சன் பிக்சர்ஸ் சார்பாக 100 குழந்தைகளின் இதய அறுவைசிகிச்சைக்காக ரூ.1 கோடி அப்போலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த பெரிய படமாக கருதப்படும் லியோ படம், ஜெயிலரின் வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சூப்பர் ஸ்டார் சர்ச்சை வலுத்துள்ள நிலையில் லியோ படத்தின் வசூல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு நடிகர் மீசை ராஜேந்தர் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , ஜெயிலர் அளவுக்கு லியோ படம் வசூலித்துள்ளால் நான் மீசையை எடுக்கிறேன். நூறு சதவிகிதம் ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்காது. லியோ ரூ.400, 500 கோடிக்கு மேல் போகாது என்று பேசியிருந்தார். மேலும் ஜெயிலர் கலெக்ஷன் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அதன் வசூலை லியோ படத்தால் முறியடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அப்படி நடந்தால் தன்னுடைய மீசையை தான் எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்திரன் படத்தின் வசூலை தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் தாண்டும் என்று கூறப்படும் நிலையில் லியோ அந்த கலெக்ஷனை 100 சதவிகிதம் எட்ட முடியாது என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் முழுவதும் அவரின் அந்த பேச்சு தான் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் பணத்தை கொடுத்து தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திக்கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது இதுகுறித்து மீசை ராஜேந்திரன் கூறியதாவது, “விஜய் முதன்முதலில் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியது சிம்புதேவன் இயக்கிய புலி படத்துக்கு தான். செல்வக்குமார் என்பவர் தான் அந்த படத்தை தயாரித்து இருந்தார்.

அந்த செல்வக்குமார் வேறுயாருமில்லை நடிகர் விஜய்யிடம் மேனேஜராக பணியாற்றியவர் தான். அவருக்கு எப்படி அவ்வளவு பெரிய படத்தை தயாரிக்க காசு வந்தது. அந்த பணம் அனைத்துமே விஜய் உடையது தான். அவர் பணத்தையே கொடுத்து படத்தை எடுத்து அதற்கு ரூ.70 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்கிறார். அதன்மூலம் அவரின் மார்க்கெட்டும் ஏற ஆரம்பித்தது.” என்று பேசியுள்ளார்.

மேலும் “இதே பார்முலாவை தான் மாஸ்டர் படத்திலும் பயன்படுத்தினார் விஜய். மாஸ்டர் படத்தை தயாரித்தது நடிகர் விஜய்யின் தாய் மாமா சேவியர் பிரிட்டோ என்பது அனைவருக்கும் தெரியும். அப்படத்தை எடுக்க அவர் செலவழித்தது எல்லாம் விஜய்யோட பணம் தான். இப்படி ஒவ்வொரு படத்துக்கும் விஜய், தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தே தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டார்.

அதனால் தான் அவருடைய சம்பளம் தற்போது ரூ.100 கோடியை தாண்டிவிட்டது” என நடிகர் மீசை ராஜேந்திரன் கூறி இருக்கிறார். விஜய்யின் சம்பளம் குறித்து அவர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் சம்பளம் அடிப்படையில் நடிகர் வரிசை படுத்தப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் அவருடைய பணத்திலே அவருக்கு நெருக்கமானவர் மூலம் அவருடைய படத்தை தயாரித்து,

அதாவது தான் அதிகம் சம்பளம் வாங்குகிறேன், நான் தான் டாப் ஓன்று என்று தம்பட்டம் அடிப்பதற்காக விஜய் அவருக்கு அவரே சம்பளம் கொடுப்பது போன்று தன்னுடைய பணத்தில் தனக்கு நெருக்கமானவர் களை பினாமியாக பயன்படுத்தி படம் எடுத்து தில்லாலங்கடி வேலை செய்துள்ளார் என்கிற விமர்சனம் தற்பொழுது மீசை ராஜேந்திரன் பேட்டிக்கு பின்பு எழுந்துள்ளது குறிப்பிட்டுள்ளது..