தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய், நீண்ட வருடமாக அரசியல் ஆசையில் இருந்து வரும் நடிகர் விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அதே போன்று தனது விஜய் மக்கள் மன்றம் மூலமாக அரசியல் பணிகளை செய்து வருகின்ற விஜய் கடந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை களத்தில் இறங்கினார்.
நடிகர் விஜய் வெளிப்படையாக நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும், மறைமுக அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். எதிர்காலத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என வியூகங்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஐதராபாத்தில் நடிகர் விஜய் உடன் சுமார் ஒரு மணி நேரம் வரை சந்தித்து வருகின்ற 2021 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதாவது, தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர், பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது, மேலும் காங்கிரஸ் காலாவதியாகி விட்டதால், மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கு முயற்சியில் இறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர் அந்த கூட்டணியில் நடிகர் விஜயை இடம் பெற வைப்பதற்காக தான் ஐதராபாத்தில் நடந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த தமிழகத்தில் ஆளும் தரப்பினர், நடிகர் விஜய் அரசியல் வருகை என்பது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இருந்து நடிகர் விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளில் இறங்கியுள்ளது ஆளும் தரப்பினர். இதன் தொடர்ச்சியாக, தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சரிடம் விஜய் விவகாரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்த பட்டுள்ளனர்.
மேலும் பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் ஆடியோ நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவதை வழக்கமாக கொண்டவர் விஜய். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ள நிலையில்.
பீஸ்ட் பட ஆடியோ நிகழ்ச்சி மேடையை தனது அரசியல் மேடையாக வழக்கம் போல் பயன்படுத்த திட்டமிட்டு இருந்துள்ளார் விஜய். ஆனால் ஆளும் கட்சி தரப்பில் இருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு வந்த அழுத்தத்தின் காரணமாக. தம்பி விஜய் உன் அரசியல் நம்ம கிட்ட வேண்டாம் என நடிகர் விஜய்க்கு ஆப்பு வைக்கும் விதத்தில் பீஸ்ட் பட ஆடியோ நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.