லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டும் கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருந்து வந்தது.
லியோ படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்சனை என பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படம் வெளியான பின்பு விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சனை நடந்துள்ளது, அந்த வகையில் லியோ படத்தை விருப்பமில்லாமலே லோகேஷ் கங்கராஜ் இயக்கி முடித்துள்ளார் என்கின்ற சந்தேகம் தற்பொழுது மிகப் பெரிய அளவில் வலுக்கும் வகையில் அவளோ மோசமாக அமைத்துள்ளது லேயோ திரைப்படம்.
விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சனை வருவதற்கு ஆரம்ப புள்ளி மாஸ்டர் திரைப்படம் தான், காரணம் மாஸ்டர் திரைப்பட வெளியான பின்பு விஜய் சேதுபதியின் படத்தில் விஜய் என சினிமா விமர்சகர்கள் விமர்சனம் செய்தார்கள், அந்த அளவுக்கு மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தில் மாஸ்டர் படத்தில் செய்தது போன்று பிற நடிகர்களுக்கு முக்கிய த்துவம் கொடுக்கக் கூடாது, இது முழுக்க முழுக்க விஜயின் படமாகவே இருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் விஜய் உத்தரவு போட்டிருக்கலாம் என்றும்.
அந்த வகையில் விஜய்யின் இந்த உத்தரவின் காரணமாக லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்திருந்த ஒரிஜினல் கதையிலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கலாம், அதாவது லோகேஷ் கனகராஜ் தயார் செய்திருந்த கதையில் உள்ளே புகுந்து விஜய் பல குளறுபடியை செய்திருக்கலாம் என்றும், இதனால் விஜயின் கட்டாயத்திற்காக உடன்படாமலே லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் எடுத்து முடித்து இருக்கிறார் என்கிற விமர்சனம் லியோ படத்தை பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு புகையிலை கம்பெனியில் தந்தை சட்டவிரோதமான சில செயல்களை செய்கிறார், அதில் மகனுக்கு விருப்பமில்லை இது தந்தை மகனுக்குமான பிரச்சனையாக செல்கிறது, அதில் தந்தை ஆடு, மாடு, பன்றி போன்ற மிருகங்களை பலி கொடுக்கிறார், ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த மகளை பலி கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு முடிவுக்கு தந்தை வரும் காட்சி குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தை இழிவு படுத்துவது போன்று அமைத்துள்ளது.
பொதுவாக அந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் படி கிறிஸ்துவ மக்கள் ஜாதகம், ஜோதிடம் நரபலி போன்ற இதுபோன்ற சம்பிரதாயத்தை அவர்கள் மத படி பார்ப்பது கிடையாது, ஆனால் அதில் ஜோதிடம் பார்த்து ஒற்றை ராசியில் உள்ளவர்களை பலி கொடுக்க வேண்டும், அதில் லியோவான விஜய்யாக இருக்க வேண்டும் அல்லது அவருடைய தங்கச்சியாக இருக்க வேண்டும், லியோவான விஜய்யை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அவருடைய தங்கச்சியை நரபலிக்கு கொண்டு வர வேண்டும் என்கின்ற காட்சிகள் எல்லாம் லாஜிக்கே இல்லாமல் செல்கிறது.
மேலும் தொழிலுக்காக பெத்த மகளையே யாராவது நரபலி கொடுப்பார்களா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.? லியோ படத்தில் ஒரு டயலாக் வரும், ரத்தத்தை பார்த்து பயப்பட வேண்டாம் இது என்னுடைய ரத்தம் என்று ஆனால் படம் பார்த்தவர்களுக்குத்தான் காதில் ரத்தம் வருகிற அளவுக்கு அமைந்துவிட்டது லியோ படத்தில் இடம்பெற்றுள்ள லாஜிக்கே இல்லாத ஒவ்வொரு காட்சிகளும்.
மேலும் மற்ற கதாபாத்திரத்திரத்துக்கு முக்கியடித்துவம் கொடுக்க கூடாது என்கிற விஜய்யின் கண்டிஷனுக்காக, சஞ்சய் தத் போன்ற மிக பெரிய நடிகர்கள் எதற்கு இந்த படத்தில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது மேலும் ஆரம்பத்திலே இது எனக்கான படமாக இருக்க வேண்டும் என ஒரிஜினல் கதையில் புகுந்து விஜய் நாசம் செய்ய தொடங்கியதுமே, லோகேஷ் இந்த ப்ரோஜெட்டை வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்து இருந்தால், விக்ரம் போன்று ஒவ்வொரு கதாபத்திரமும் மிக பெரிய அளவில் கொண்ட பட்டிருக்கும் என்கிறன்றனர் லியோ படம் பார்த்து விரக்தி அடைந்தவர்கள்.