23ம் புலிகேசி போன்று ஆனது விஜய்யின் ராஜதந்திரம்… அதெற்கெல்லாம் தைரியம் வேண்டும் விஜய்.

0
Follow on Google News

அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய், ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வது, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து சொல்வது, தன்னுடைய படத்தின் அரசியல் வசனம் என்று தொடர்ந்து தனது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு வருகிறவர். அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் கருத்துக்களால் ஏற்படும் பிரச்ச்னையை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் பல நேரங்களில் அந்தர் பல்டியும் அடித்துள்ளார் விஜய்.

விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் இடம்பெற்ற ‘Time To Lead’ என்ற வசனம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து போராடி தன்னுடைய படத்தை விஜய் நிச்சயம் திரைக்கு கொண்டு வருவார் என அவரது ரசிகர்கள் சில்லறை சிதற விட்டு கொண்டு இருக்கையில்.

பலரும் எதிர்பார்த்தது போன்று தலைவா படம் திரைக்கு வந்தது, ஆனால் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் போராடி விஜய் தன்னுடைய தலைவா படத்தை திரைக்கு கொண்டு வரவில்லை, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு போருக்கு புறப்பட்டு சென்று வெள்ளை கொடி காட்டி சமாதனம் செய்ய முயற்சித்து இறுதில் அட ..ச் …சீ படுத்தே விட்டானயா என்று ஒரு காட்சி வரும்.

அது போன்று ‘Time To Lead’ என ஆளும் ஜெயலலிதா அரசை சீண்டுவது போன்று போஸ்டரில் வசனம் வைத்துவிட்டு, பின்பு கைகட்டி அம்மா நீங்க தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிதாபத்துடன் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வீடியோ மூலம் கோரிக்கை வைத்து, மேலும் தலைவா போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் நீக்கப்பட்டு தலைவா படத்தை திரைக்கு கொண்டு வந்தவர் விஜய்.

இதன் பின்பு சில காலம் அரசியல் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு மத்திய பாஜக அரசை சீண்டுவது போன்று தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த விஜய், மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடந்த வருமான வரித்துறைக்கு பின்பு கப் சிப் என அரசியல் குறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வந்த விஜய் தற்பொழுது மெல்ல அரசியலில் ஆழம் பார்க்க தொடங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கார் பிறந்த நாளன்று, தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட விஜய் மக்கள் மன்றம் சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்த விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் மன்ற தலைவர் புஷ்லி ஆனந்த் மூலம் தகவல் சென்றுள்ளது, அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் மூலம் அவரை கொண்டாடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதரவை பெற்று விடலாம் என்கிற நோக்கில் தான் இந்த நகர்வை விஜய் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் மன்ற சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செய்யவில்லை, சென்னை உட்பட சில இடங்களில் மட்டுமே விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணுவித்தனர். இந்நிலையில் அம்பேத்கார் சிலைக்கு விஜய் சார்பில் மாலை அணுவித்த செய்தி மீடியாவில் முக்கியத்துவம் பெறும், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெரிதாக எந்த ஒரு மீடியாவும் கண்டு கொள்ள வில்லை, இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய ரசிகர்களுக்கு விஜய் முனுத்தரணமாக இருக்க வேண்டும், அம்பேத்கார் மீது உண்மையிலே பற்று இருந்திருந்தால், அம்பேத்கார் சிலைக்கு விஜய் நேரில் வந்து மாலை அனுவித்து மரியாதை செலுத்த முடியவில்லை என்றாலும் கூட குறைந்த பட்சம், விஜய் அவரது வீட்டில் ஒரு அம்பேத்கார் புகைப்படத்திற்கு அம்பேத்கார் பிறந்த தினம் அன்று மலர் தூவி மரியாதை செலுத்தி இருந்தால் கூட அந்த செய்தி முக்கியத்துவம் அடைத்திருக்கும்.

ஆனால், சில நிமிடம் கூட ஒதுக்கி தலைவர்களுக்கு மரியாதை செலுத்த நேரம் இல்லாமல் பிசியாக இருக்கும் விஜய், தன்னுடைய அரசியல் ஆழத்தை அம்பேத்கார் பிறந்த தினத்தன்று ரசிகர்கள் மூலம் பார்த்ததில் பலத்த அடி வாங்கி மண்ணை தான் கவ்வியுள்ளார். அந்த வகையில் விஜய்யின் அரசியல் நகர்வுகள், அவர் களத்தில் இறங்காமல் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று நினைத்தால், அது தோல்வியில் தான் முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.