விஜய் செய்த அதே தவறு… சோனியா செய்து சர்ச்சையில் சிக்கிய சம்பவம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் இதற்கு முன்பு நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய். மாணவர்கள் மத்தியில் பேசுகையில் நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிங்க என பேசி இருந்தார், இதற்கு பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் ஒரு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புறக்கணித்துவிட்டு விஜய் பேசியுள்ளார், அப்படியானால் ஒரு சொல்லக்கூடிய தலைவர் இடத்தில் தேவர் இல்லை என்று விஜய் சொல்கிறாரா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சௌத்ரி தேவர்,

அடுத்த முறை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் விஜய் ரசிகராக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமூகத்தினர் அவருடைய ரசிகர் மன்றங்களை நிச்சயமாக களைப்பார்கள். அது நடக்குமா.? இல்லையா.? என்று மட்டும் பாருங்கள் என சவால் விடுத்த சௌத்ரி தேவர்.

அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்காமல் விஜய் அரசியலுக்குள் வந்தால் அது மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தேவர் பெயரை யார் உச்சரிக்கவில்லை என்றாலும் நான் தட்டி கேட்பேன், அரசியல்வாதிகள் மறைத்தது போன்று இன்று நடிகர்களும் தேவரின் புகழை மறைக்க தொடங்கி விட்டார்கள் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை விஜய் தெரிவிக்காததற்கு கடுமையான எதிர்ப்பு தெறிவித்திருந்தார் சௌத்ரி தேவர்.

இந்நிலையில் விஜய்க்கு நடந்த அதே சம்பவம் தற்பொழுது சோனியா காந்திக்கும் நடந்துள்ளது. சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா- மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. பெண்களின் முன்னேற்றத்திற்காக காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோரது பெண்கள் விடுதலைக்கான பங்களிப்பையும் சோனியா காந்தி சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி , பாலின சமத்துவத்துக்காக போராடியவர். மதம், ஜாதி, மொழி, பிரதேசம் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்று அவர் நம்பினார். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தலைவர் என புகழாரம் சூட்டி பேசினார் சோனியா காந்தி.

இந்நிலையில் சோனியாவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன். மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள்.

ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?. இவ்வாறு “ஆளுநர்” தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் சோனியா காந்தி காமராஜர் பெயரை குறிப்பிடாமல் பேசியதற்கு தமிழிசை சௌந்தராஜன் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டி கட்டியுள்ள தயாரிப்பாளர் சௌத்ரி தேவர், தன்னுடைய டிவீட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர் தான் மேதகு ஆளுநர் அக்கா தமிழிசை என்றும், அந்த வகையில் குறிப்பிட்ட தலைவர்கள் பெயரை சொல்லிவிட்டு தேவரை சொல்லவில்லை என்று விஜய்க்கு கேள்வி எழுப்பியது போல் காங்கிரசை சேர்ந்த காமராஜர் பெயரை ஏன் சொல்லவில்லை என்று காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கு என்னை போலவே ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார் , கேள்வி எழுப்பினால் தான் விடை கிடைக்கும் கதவை தட்டினால் தான் கதவு திறக்கும் என்று தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக தலைவர்கள் பெயரை மேடையில் குறிப்பிடவில்லை என அந்தந்த தலைவரை பின்பற்றும் பிரபலங்கள் மத்தியில் வரும் எதிர்ப்பு குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்