ரசிகர்கள் இடையே சண்டை இழுத்து விட்டு குளிர் காய்கிறாரா விஜய்.? இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், விஜய் நடித்த வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாகிறது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் விஜய் -அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதுவதால் இரண்டு ரசிகர்களுக்கு இடையில் கடும் மோதல் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் சமீபத்தில் பேசுகையில், துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர்கள் தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை. விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன் என தில்ராஜ் தெரிவித்தார்.

தில் ராஜூவின் ‘விஜய் தான் நம்பர் 1’ எனும் இந்தக் கருத்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இது குறித்து பேசுகையில், சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. அப்படியானால் கமல்தானே நம்பர் 1 என்று கூறலாமா.?

பொன்னியின் செல்வன் படம் விக்ரம் படத்தைவிட அதிக வசூல் செய்தது அந்த படத்தில் நடித்த விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி இதில் யார் நம்பர் 1, சினிமாவைப் பொறுத்தவரை கதைதான் நம்பர் 1. விஜய்யை வைத்து படம் எடுப்பதால் விஜய் நம்பர் 1 என்ரு சொல்கிறார். நாளை அஜித்தை வைத்து படம் எடுத்தால் அஜித்தான் நம்பர் 1 என்பார்.

விஜய்தான் நம்பர் 1 என்றால் வாரிசு கதையை மகேஷ் பாபு, ராம்சரணிடம் சொல்வதற்கு முன் விஜய்யிடம்தான் வந்திருக்க வேண்டும். பிறகு இவர் எதை வைத்து விஜய் நம்பர் 1 என்கிறார் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் நம்பர் 1 என்று தில் ராஜ் பேசியதால், தமிழக சினிமா ரசிகர்கள் இடையே கடும் மோதல் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னை நம்பர் 1 நடிகர் என தில் ராஜ் பேசினால், அடுத்தடுத்து தில்ராஜ் தயாரிப்பில் நடிக்க விஜய் கால் சீட் கொடுப்பர் அதனால் தான் விஜையை குளிர் வைக்க தில் ராஜ் இப்படி பேசுகிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. அதே போன்று தில் ராஜை இப்படி பேச வைத்து ரசிகர்கள் இடையே சண்டை இழுத்து விட்டு குளிர் காய்கிறாரா விஜய் என்கிற கண்டனும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருமகனை டார்கெட் செய்து அடிமடியில் கைவைத்த அண்ணாமலை.. கைவிட்டு பின்வாங்கிய திமுக அரசு..

FACEBOOK: https://www.facebook.com/dinaseval TWITTER: https://www.twitter.com/dinaseval FAIR USE Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Dinaseval News . விளம்பர தொடர்பிற்கு – [email protected]