மக்கள் கொடுத்த மரண அடி… கமல்ஹாசனை பார்த்து வாயை மூடி கொண்ட விஜய்..! என்ன அடி தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சுமார் நான்கு வருடங்களுக்கு பின் வெளியான படம் விக்ரம் -2. கமல்ஹாசன் சினிமா பயணத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான முதல் படம் விக்ரம். மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் சுமார் 9 வருடங்களுக்கு பின்பு கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் ஒரு வெற்றி படத்தை கொடுத்து தன்னை சினிமாவில் மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

கடந்த 9 வருடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் படுதோல்வியை தழுவியது. கமல்ஹாசன் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருடைய படங்களை அணைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வந்த நிலையில், முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அரசியல் பேச ஆரம்பித்த கமல்ஹாசன் சினிமா வாழ்க்கை இதன் பின்பு தான் சரிவை சந்தித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கமல்ஹாசனை திரையில் ரசித்த மக்கள்.

கமல்ஹாசனின் அரசியல் கருத்துக்களால் குறிப்பிட்ட சிலர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்திக்கும் சூழல் கமல்ஹாசனுக்கு உருவாக்கியது. இது மேலும் அவரது சினிமா மார்க்கெட்டை சரிவை நோக்கி அழைத்து சென்றது. மேலும் அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு அவருடைய சினிமா வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்து விட்டது என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு அரசியலை கைகழுவிய கமல்ஹாசன்.

தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தினார். குறிப்பாக அரசியல் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார் கமல்ஹாசன். மேலும் விக்ரம் படத்தில் அரசியல் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கவில்லை, பொதுவாக கமல்ஹாசன் படம் என்றால் அவருடைய தலையீட்டுகள் அதிகம் இருக்கும், ஆனால் விக்ரம் 2 படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகாராஜ்க்கு முழு சுதந்திரம் அளித்து, இது லோகேஷ் படம் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய வேலையை மட்டும் செய்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் இந்த மாற்றத்திற்கு பலனாக தற்பொழுது வெளியாகி உள்ள விக்ரம் 2 படம் நல்ல வெற்றியை பெற்று, வசூலை வாரி அள்ளி குவித்து வருகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் சினிமாக்களில் விக்ரம் படம் தான் அதிக வசூல் சாதனை படைத்தது என்று சொல்லும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் கமல்ஹாசன் அரசியலை கை கழுவியது தான் என்றும், மேலும் தன்னுடைய படத்திலும் அரசியல் கருத்துக்களை புகுத்தாதது தான் என்பது நிரூபணமாகி உள்ளது.

இந்நிலையில் அரசியலால் சினிமாவில் அழிவின் விளிம்பிற்கு சென்று மறு வாழ்வு எடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனை பார்த்து, இனி எந்த ஒரு அரசியல் கருத்தும் தெரிவிக்க கூடாது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் நடிகர் விஜய், அவரை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரும் அரசியல் கருத்துக்களால் தங்கள் குடும்பத்திற்கு அவ பெயரும், சினிமாவில் மார்க்கெட் இழந்தது தான் மிச்சம்.

ஆகையால் இனி வரும் காலங்களில் தன்னை ஒரு சமூக போராளி போன்று காட்டி கொள்வதை கைவிட்டுவிட்டு கதைக்கு முக்கியத்துவம் அளித்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற முடிவில் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அரசியல் கருத்து தெரிவிப்பது அந்த நேரத்தில் மட்டும் அரசியல் கருத்து தெரிவிக்கின்றவர்களுக்கும், அந்த நேரத்தில் வெளியாகும் அவர்களின் படத்துக்கு விளம்பரத்தை பெற்று தரும்.

ஆனால் அதுவே அவர்களுக்கு மிக பெரிய சிக்கலையும் ஏற்படுத்தும் என்பது. ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையின் காரணமாக, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியான எதற்கும் துணிந்தவன் படம் மிக பெரிய அடி வாங்கியது கூறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மக்கள் நடிகர்களை நடிகராக தான் பார்க்கிறார்கள் என்பதை குட்டி கதை சொல்லும் நடிகர்களும், பன்ச் வசனம் பேசும் நடிகர்களும் தற்பொழுது புரிந்து கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?