நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் நான் ரெடி பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ள இந்த பாடல், சிறுவர்கள் முதல் பெரியவர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்தப் பாடலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளதோ, அதே அளவு எதிர்ப்பும் மிக கடுமையாக கிளம்பி, இந்தப் பாடலுக்கு மேலும் மிகப்பெரிய விளம்பரத்தை பெற்று கொடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள நான் ரெடி பாடலில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்று, மேலும் அந்த பாடலில் மது பாட்டில்களும் இடம்பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த பாடலில் இடம்பெற்ற பாடல் வரிகளும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய இளம் தலை முறையினரை போதைப் பழக்கத்திற்கு ஊக்குவிப்பது போல் இந்த பாடல் அமைந்துள்ளது, என்றும் சில சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக விஜய் மீது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது எழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக அந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகளை பட குழுவினர் நீக்குவார்கள் என்றும், அதேபோன்று பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள சர்ச்சை கூறிய வார்த்தைகளை மூட் செய்து அந்த சர்ச்சைக்குரிய வரிகளுக்கு பதில் பீப் சவுண்டுடன் சர்ச்சைக்குரிய நான் ரெடி பாடல் திரைக்கு வரலாம் என கூறப்பட்டது.
ஆனால் பெரும் பொருள் செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை மீண்டும் ரீசூட் செய்யப்பட்டால், இதுவரை அந்த ஒரு பாடலுக்காக செலவு செய்யப்பட்ட பணம் வீணாகி விடும் என்பதால், அதே நேரத்தில் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை மீட் செய்தால் அந்த பாடலை திரையில் பார்ப்பதற்கு பார்க்கும்போது அதிகமான பீப் சவுண்டு மட்டுமே கேட்கும்.
இதனால் நான் ரெடி பாடல் முழுமையான வெற்றியை திரையில் பெறாது என்றும், அதே நேரத்தில் யாரோ ஒரு சிலர் எந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், உலகம் முழுவதும் மிக பெரிய வெற்றியை பெற்று அனைவரையும் ஆட்டம் போட வைத்து வருகிறது நான் ரெடி பாடல், இந்நிலையில் வழக்கம் போல் நடைமுறையில் உள்ள, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சி வரும் போது புகைபிடிப்பது, மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்கிற வாசகம் மட்டுமே இந்த பாடலில் இடம் பெரும் என்றும்.
அதை தாண்டி, நான் ரெடி பாடலில் எந்த ஒரு மாற்றமும் செய்வதற்கு பட குழு தயாராக இல்லை என கூறப்படுகிறது. மேலும் படத்தை ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்க சென்சார் போர்டு இருக்கும்போது, அவரவர் சுய விளம்பரத்திற்காக, அவர்கள் பிரபலம் அடைவதற்காக செயல்படுவதற்கெல்லாம் செவி சாய்க்க கூடாது என்கிற முடிவில் விஜய் மற்றும் லியோ பட குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நான் ரெடி பாடல் வெளியான் பின்பு, விஜய் புகை பிடிக்கும் காட்சி மற்றும் அந்த பாடலில் இடம்பெற்ற பாடல் வரிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை விஜய் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை என்றும், இது மாதிரி பல சலசலப்புகளை பார்த்தவன் என்கிற தோரணையில் விஜய் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு அதிகம் சிறுவர், இளைஞர்கள் ரசிகர்கள் இருந்து வருவதால், சமூக பொறுப்புடன் விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.