நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துணிவு. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிட்டது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் மூவிஸ். இதேபோன்று நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்தது.
ஆனால் உதயநிதி மீது இருந்த முன் விரோதம் காரணமாக எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய வாரிசு படத்தை ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் வெளியிடுவதற்கான உரிமையை தரக் கூடாது என்று விஜய் தயாரிப்பாளருக்கு கடிவாளம் போட்டு விட்டார். இந்த நிலையில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தை களம் இறக்க முடிவு செய்த ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் நடிகர் விஜய்க்கு மிக பெரிய நெருக்கடியையும் கொடுத்தனர்.
மேலும் விஜய் உடன் அஜித்தை நேரடியாக மோதவிட்டு, இதுவரை விஜய் தான் நம்பர் ஒன் வசூல் நாயகன் என்கின்ற ஒரு பிம்பத்தை உடைத்து எரிந்து, விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்துள்ளது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிட ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்து வருகிறது.
ஆனால் தயாரிப்பாளர் லலித்திடம் எந்த ஒரு சுழலிலும் ரெட் ஜெய்ன்ஸ் மூவிஸ்க்கு லியோ படத்தை கொடுக்க கூடாது, என்ன பிரச்சனை வந்தாலும் சந்திப்போம் என விஜய் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கி வெளியிட உள்ளது.
மேலும் விஜய் நடித்த வாரிசு படத்துடன் அஜித் நடித்த துணிவு படம் நேரடியாக மோதியது அஜித்துக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றும், மேலும் இதே ஃபார்முலாவை அடுத்தடுத்து பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அஜித் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார். ஆனால் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், அஜித் நடிக்க இருக்கும் புதிய படம் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் அஜித் தன்னுடைய அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, இடைவிடாமல் புதிய படத்தில் நடித்து கொடுக்கிறேன், லியோ படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய படமும் வெளியாக வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த முடிவு ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்க்கு சாதகமாக அமைத்துள்ளது. மேலும் இந்த தகவல் விஜய் கவனத்துக்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே துணிவு படத்துடன் மோதி பலத்த அடி வாங்கியதை மறக்காத விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இடைவிடாமல் லியோ படத்தை எடுத்து முடித்து விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும், சற்று தாமதம் ஏற்பட்டால் கூட அஜித் நடிக்கும் புதிய படத்தி எடுத்து முடித்து, லியோ வெளியாகும் அதே தேதியில் அவர்களும் ரிலீஸ் செய்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள் என இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் விஜய்.
ஆனால் அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றாலும், ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் உரிமையை வாங்கி லியோ படம் வெளியாகும் அதே தேதியில் வெளியிட்டு, விஜய்க்கு நெருக்கடி கொடுக்க தயாராக இருக்கிறது ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் என கூறப்படுகிறது.