விஜயகாந்த், ரஜினிகாந்திடம் காட்டிய வித்தைகளை என்னிடம் கட்ட முடியாது … விஜய்யின் அரசியலே வேறு லெவல்…

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒவோன்றும், தமிழக அரசியலில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் நடித்து கொண்டிருந்த போதே பிரபல இலக்கியவாதியும், மூத்த அரசியல் பார்வையளருமான பழ கருப்பையாவை நேரில் அழைத்த விஜய், நீண்ட நேரமாக தமிழக அரசியல் குறித்தும், தான் அரசியலில் என்ட்ரி கொடுப்பதும் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது பழ கருப்பையா, கட்சி தொடங்கிய உடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல, அரசியல் கட்சி தொடங்கி அந்த கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பழ கருப்பையா தெரிவித்துள்ளார். உடனே ஒரு திரையில் விஜய் மக்கள் மன்றம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் கிளைகளாக விரிந்து கட்டமைப்புடன் செயல்பட்டு வருவதை பழ.கருப்பையாவிடம் போட்டு காண்பித்த விஜய்.

மேலும் தன்னுடைய மக்கள் மன்றம் மூலம் மக்களுக்கு நல திட்ட உதவிகள் செய்து வருவது, அதனால் தன்னுடைய ரசிகர்கள் மக்களுடன் எந்த அளவுக்கு கனெக்ட்டாகி உள்ளார்கள் என்பதை விளக்கியுள்ளார் விஜய். இதையெல்லாம் பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டிய பழ.கருப்பையா, ஆனால் இதெல்லாம் ஓட்டாக மாறாது அப்படி ஓட்டாக மாறவேண்டும் என்றால், நீங்கள் களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என தெரிவித்த பழ கருப்பையா.

மேலும் நீங்கள் களத்தில் இறங்கி அரசியல் செய்யும் போது, பல பொது கூட்டங்களில் நீங்கள் மக்கள் மத்தியில் பேசும் போது தான் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்க முடியும் என பழ கருப்பையா தெரிவித்த ஆலோசனையை பரிசீலனை செய்த விஜய், அதன் பின்பு தான் தற்பொழுது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை மிக பிரமாண்டமாக அரசியல் பொது கூட்டம் போல் நடத்த விஜய் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக அரசியலில் உள்ள அரசியல் கட்சிகள், நமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம், ஆனால் புதியதாக எந்த ஒரு அரசியல் கட்சியும் வந்து விட கூடாது, அப்படி வந்துவிட்டாலும் வளரவிட கூடாது என்பதில் தமிழகத்தில் உள்ள அரசியல் காட்சிகள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு நடிகர் விஜயகாந்தை உதாரணம் காட்டி விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் எச்சரித்து வந்துள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு நடிகராக இருக்கும் வரை அவரின் ரசிகர்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக ரஜினியை தூக்கி கொண்டாடியவர்கள், அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி சொன்ன பின்பு அரசியல் ரீதியாக ரஜினியை மிக கடுமையாக எதிர்த்து வந்ததை நன்கு உணர்ந்த விஜய், ஒரு நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி இன்று முதல்வராக இருக்க வேண்டிய விஜயகாந்துக்கு ஏற்பட்ட சரிவுக்கு காரணம்.

அதே போன்று அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அரசியல் கட்சி தொடங்காமலே கைவிட்ட ரஜினி, இது போன்ற பல சம்பவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்ட விஜய், தனக்கு இதுபோன்ற இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படும் போது அதை சமாளிக்கவும் தயார் நிலையில் தான் உள்ளாராம் விஜய். அந்த ஓய்வு பெற்ற இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் எடுத்து வைத்து வரும் விஜய்.

அரசியல் என்ட்ரி கொடுத்த பின்பு மக்கள் மத்தியில் தனக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் கூட, தனக்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வரும், அதை எப்படி எதிர்கொள்வது, தனக்கு வரும் எதிர்ப்புகளை, அதை தனக்கு சாதகமாக எப்படி கையாள்வது போன்ற பல அலோசோனைகளை ஓய்வு பெற்ற இரண்டு ஐஎஎஸ் அதிகாரிகளின் ஆலோசனை படி விஜய் செயல்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.