அது வேற வாய்.. இது நாற வாய் … மாற்றி மாற்றி பேசி பல்பு வாங்கிய விஜய்.. என்ன பழக்கம் விஜய் அண்ணா இது.?

0
Follow on Google News

நடிகர் விஜய் முதல் அரசியல் மாநாட்டில் எந்த மாதிரி பேசப்போகிறார்.? என்ன கொள்கையை அறிவிக்கப் போகிறார்.? எப்படி நடந்து முடிய போகிறது விஜய் மாநில முதல் மாநாடு என்கின்ற பல விவாதங்களுக்கு மத்தியில் தமிழக அரசியலில் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது நடிகர் விஜயின் மாநாடு. காரணம் ஏற்கனவே இருக்கின்ற அரசியல் கட்சிகள் விஜயை ஒரு அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்கிறதோ.? ஏற்றுக்கொள்ளவில்லையோ.? ஆனால் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாது என்பது நடந்து முடிந்த விஜய் TVK மாநாடு உணர்த்தியுள்ளது.

நடிகர் விஜயை கூத்தாடி என்கின்ற வசை மொழி பேசி அவரை அரசியல்வாதி இல்ல ஒரு நடிகன் தான் என்கின்ற விமர்சனத்தை முன் வைத்தாலும் கூட, இன்று நடிகர் விஜய்யை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாது என்பதற்கு அவர் மாநாட்டில் கொடுத்த கூத்தாடிக்கான விளக்கமே சான்று. அந்த வகையில் பல விமர்சனகளுக்கு மத்தியில் TVK மாநாட்டை வெற்றிகரமாக விஜய் நடத்தி முடித்து விட்டாலும், அவருடைய பேச்சில் பல முரண்பாடு உள்ளது.

நடிகர் விஜய் என்னுடைய தம்பி தம்பி என்று கூறி வந்த சீமானுக்கு தரமான சம்பவத்தை விஜய் மாநாடு மூலம் செய்துவிட்டார். அந்த வகையில் விஜய் பேசும்போது இங்கே பல புத்தகத்தை படித்துவிட்டு பல பொன்மொழிகளை பேசுகிறார்கள். இதெல்லாம் நமக்கு வராது நம்ம நேரடியா நம்மளுடைய கருத்தை சொல்லி விடுவோம் என்று சீமானை ஊமை குத்தாக குத்திவிட்டார் விஜய்.

அதாவது சீமான் தான் அந்த தலைவர் அதைச் சொன்னார், இவர் இதைச் சொன்னார் என்று கதையை அளந்து விடுவார், அந்த வகையில் சீமான் பெயரை சொல்லாமலே மறைமுகமாக தாக்கி விட்டார் நடிகர் விஜய் அது, மட்டும் இல்லாமல் சீமான் இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதாவது மீன் பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள் மீனை இலவசமாக கொடுக்காதீர்கள் என்பதை பேசி வருகிறார் சீமான்.

இதற்கு சீமான் பெயரை சொல்லாமலே மறைமுகமாக தாக்கி பேசிய நடிகர் விஜய் மீன்னும் கொடுப்போம் மீன்பிடிக்கவும் கத்துக் கொடுப்போம் என்று பேசியுள்ளது பலருக்கு குழப்பமா இருக்கிறது. அதாவது இலவசமாக மீனையும் கொடுப்போம் மீன்பிடிக்கவும் கத்துக் கொடுப்போம் என்பது ஐய்யா ராசா, எதாவது ஒரு பக்கம் நில்லு நீயும் குழப்பி எங்களையும் குழப்ப வேண்டாம் என என விஜய் பேசுவதை கேட்டவர்கள் குழப்பி போய் விட்டார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இலவசங்களை ஆதரிப்பாரா.?எதிர்ப்பாரா.?என்கின்ற ஒரு விவாதம் எழுந்து வந்த நிலையில், தற்போது இலவசங்களை ஆதரிப்பது போன்று மேடையில் பேசியுள்ள விஜய். இதற்கு முன்பு அவர் நடித்த சர்கார் படத்தில் இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருட்களை தூக்கி உடைத்தவர் தான் நடிகர் விஜய். ஆனால் அவருடைய அரசியல் கொள்கையில் அதற்கு நேர் எதிராக மாறி உள்ளது.

இலவசங்களை ஆதரிக்கும் வகையில் மேடையில் பேசிய நடிகர் விஜய், சர்க்கார் படத்தில் இலவசங்களுக்கு எதிராக மிக்ஸி கிரைண்டரை உடைத்து அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு மூலம் தன்னுடைய படத்தை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதித்த நடிகர் விஜய், தற்பொழுது அரசியலில் இலவசங்களை ஆதரிப்பது என்று பேசியுள்ளது, நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சிகள் வருவது போன்று, அது வேற வாய் இது நாற வாய் என்பது போன்ற அமைந்துள்ளது விஜயின் அரசியல் கொள்கைகள். இது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.