விஜய்க்கு வழுக்கை தலையா.? நீண்ட நாள் மர்மத்திற்கு விடை தந்த விஜய்…

0
Follow on Google News

பொதுவாகவே பெரும்பாலான சினிமா நடிகர்களுக்கு முடி கொட்டும் பழக்கம் உண்டு, இதனால் நாளடைவில் அவர்களுக்கு சொட்டை விழுந்து விடுகிறது. சினிமா நடிகர்களுக்கு முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம், ஒரு நாளைக்கு பலமுறை அவர்கள் தங்களுடைய முடியை சீப்பால் வாரிக் கொள்வது தான். மேலும் அடிக்கடி சிகை அலங்காரம் செய்து வருவது.

குறிப்பாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள் ஒவ்வொரு ஷார்ட் இடைவெளியின் பொழுதும் உடனே தலைமுடியை சரி பார்த்துக் கொள்வது, சீப்பால் தலையை வாரி கொள்வது, ரசாயன கலந்தவற்றை முடிக்கு பயன்படுத்துவது என தொடர்ந்து இப்படி ஒரு நாளைக்கு பல முறை தங்களுடைய தலை முடியை படாத பாடு படுத்தினால் அந்த முடி என்ன தான் செய்யும், இதுவே நடிகர்களுக்கு தலைமுடி கொட்டுவதற்கு முக்கிய காரணம்.

தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் எம் ஜி ஆர், அவருக்கு தலை முடி உதிர்ந்து வழுக்கையான பின்பு, அதனால் தன்னுடைய இமேஜ் எந்த ஒரு பாதிப்பும் வராதவாறு ,பொது இடங்களுக்கு மற்றும் வெளியில் எங்கே சென்றாலும் தலையில் தொப்பியுடன் தான் செல்வார். இதற்கு முக்கிய காரணம் திரையில் தன்னை பார்த்த மக்கள் அதே கண்ணோட்டத்தில் பொது இடங்களிலும் பார்க்க வேண்டும் என்பது தான்.

அதேபோன்று சினிமா துறையில் நடிகர் பாக்கியராஜ், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் தங்களுடைய வழுக்கையை மறைப்பதற்கு விக் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இமேஜை பற்றி சற்றும் கவலைப்படாமல், அவருக்கு உள்ள வலுக்கத் தலையுடன் தான் அனைத்து பொது இடங்களுக்கும் வந்து காட்சியளிப்பார்.

இந்த வரிசையில் நடிகர் விஜய்க்கு முடி கொட்டி சொட்டை விழுந்துள்ளது, அதனால் தான் அவர் விதவிதமான வீக் வைத்து நடித்து வருகிறார் வருகிறார், மேலும் பொது இடங்களுக்கு விஜய் வரும்போதும் விக் தலையுடன் தான் வருகிறார் என்கின்ற விமர்சனம் கடந்த சில காலமாக உலா வரும் நிலையில், இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி ஒன்றில் விஜய் தலைமுடி குறித்து பேசுகையில்.

நடிகர் விஜய்க்கு தலை முடி உதிர்ந்து விட்டதால் தான் அவர் விக் பயன்படுத்தி வருவதாகவும் , அதற்கு முக்கிய காரணம் ரசாயனம் கலந்த சிலவற்றை அவர் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்ததால் தான் அவருடைய தலை முடி உதிர்வதற்கு காரணமாக இருந்துள்ளது, அதனால் தான் நடிகர் விஜய் ஒவ்வொரு நாளும் தோப்பாவை விதவிதமான மாற்றி மாற்றி வருகிறார். என்று பயில்வான் ரங்கநாதன் விஜய் தலைமுடி குறித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் நேரில் வந்தார். அப்போது அவர் விக் பயன்படுத்தாமல் இயல்பான தலைமுடியுடன், தலையில் உன் பக்கம் மமுடியை ஏற்றி சீவி, நெற்றியை மறைக்காத வகையில் கிளிப் ஒன்றை பயன்படுத்தி இருந்தார். அப்போது நடிகர் விஜய்க்கு முடி அடர்த்தி கம்மியாக இருந்திருந்தாலும் ஆனால் அவருக்கு சொட்டை தலை இல்லை என்பது உறுதியானது.

இதன்பு விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் எங்க தளபதி விக்கு பயன்படுத்துகிறார், அவருக்கு வலுக்க மண்ட என்று கிண்டல் செய்தவர்க இனியாவது உண்மை என்ன என்பது புரிந்து கொண்டு இது போன்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜயின் தலைமுடி அடர்த்தி கம்மியாக உள்ளது ஆனால் அவருக்கு வழுக்கை தலை இல்லை என்பது சமீபத்தில் விஜய் பங்கு பெற்ற மனோபாலா வுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பார்க்க முடிந்தது.

ஆனால் ஒரு நடிகர் மரணதில் ஒரு சோகமான நிகழ்வுகளில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தலைமுடியை பற்றி விவாதம் செய்வது சரியானது கிடையாது சமூக வலைதளத்தில் பதிவிட்டு விவாதம் செய்து வருகின்றவர்களுக்கு பலரும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.