திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்திருப்பது தான் கருமண்டபம் என்ற பகுதி. அங்குள்ள சிங்கராயர் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. அங்கு விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் பெயரில் அங்கு சோதனை நடத்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் அங்கு சென்றனர்.
அங்குள்ள வீட்டில் ‘ஷைன் ஸ்பா’ என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி இரண்டு பெண்களும் இருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது, இந்த ஸ்பா ஆனது எந்த ஒரு உரிமையும் பெறாமல் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கிருந்த இரு பெண்களையும் மீட்டு போலீசார் காப்பதற்கத்திற்கு அனுப்பியுள்ளனர்
லட்சுமி தேவி என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். லட்சுமி தேவி என்பவர் அங்கு பணிபுரிந்து கொண்டு வருகிறார். இந்த ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் என்பவர் ஆவார். இவர் திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் பெயரில் செந்தில் தான் உரிமையாளர் என்று தெரிய வந்ததால், அவரை கைது செய்ய போலீசார் முழு வீச்சில் இறங்கினர். இதனை அறிந்த செந்தில் தலைமறைவாகினார். ஒரு வாரமாக போலீசாரும் விடாமல் தேடினர். அதன்பின் செந்தில் புதுச்சேரியில் தலைமறைவாகி உள்ளார் என்று போலீசாருக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரை பிடிக்க அனைவரும் புதுச்சேரி விரைந்தது.
அங்கு செல்லும் வழியில் காரைக்காலில் செந்தில் கைது செய்யப்பட்டு , விசாரணையின் போது செந்தில் இடையே சென்னைக்கு சென்று உள்ளதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்தை சந்தித்ததும் தெரிய வந்துள்ளது. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்துள்ளது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்நிலையில் விபச்சார புகாரின் காரணமாக கைது செய்யப்பட்ட செந்தில் குறித்து, ஏற்கனவே சில தகாத வேளைகளில் ஈடுபட்டு வருவதாக, விஜய் ரசிகர்கள் ஆடியோ மூலம் விஜய் மக்கள் இயக்கத்திற்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் புகார் நடிகர் விஜய்யின் கவனத்திற்கும் சென்றதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தலையிட்டு உடநீ செந்திலை மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து நீக்க புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விஜய் தெரிவித்தும் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார், ஆனால் தற்பொழுது போலீசில் சிக்கி செந்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டிய புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்திருந்தால், விஜய் மக்கள் மன்ற பெயருக்கு அவ பெயர் ஏற்பட்டிருக்காது என வருத்தப்படும் விஜய் ரசிகர்கள், தளபதி செந்தில் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியும் புஸ்சி ஆனந்த் கேட்கவில்லை என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருவதாக கூறப்படும் நிலையில்.
தற்பொழுது விஜய் மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்துள்ள செய்தி இணையதளத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், புஸ்ஸி ஆனந்த், செந்திலை கட்சியிலிருந்து இனிமேலாவது நீக்கம் செய்யும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவாரா என்று விஜய் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். .