விஜய் ஆண்டனி முகம் முற்றிலும் சேதம்… இனி எப்படி படத்தில் நடிப்பார்.?

0
Follow on Google News

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் பார்ட் 2 தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை அவரே நடித்து தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், படத்தை முழுவதுமாக பார்த்த விஜய் ஆண்டனிக்கு காமர்சியலாக ஒரு பாடல் காட்சி இந்த படத்தில் இடம்பெற வேண்டும் என விரும்பியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் எடுக்கப்பட்டிருக்கும், அதே போன்று ஒரு பாடல் காட்சி எடுக்க விரும்பிய விஜய் ஆண்டனி, பட குழுவினருடன் லங்காவி தீவுக்கு சென்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். லங்காவி தீவில் ஒரு கடற்கரையில் அதி வேகமாக தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டரில் சேசிங் செய்வது போன்ற ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் ஆண்டனி அதிவேகமாக தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டரில் லைப் ஜாக்கெட் ஏதும் அணியாமல் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அதிவேகமாக அந்த தண்ணீரில் ஓடும் பைக் கட்டுப்பாட்டை இழந்து அவர் முன்பாக சென்ற ஒரு படத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி நீச்சல் தெரியாததால் கடல் நீருக்குள் மூழ்கியுள்ளார். அங்கே இருந்த கேமராமேன் விஜய் ஆண்டனியை காப்பாற்றி கரை சேர்த்து உள்ளார்.

அங்கே இருந்தவர்கள் முதலுதவி செய்து உடனே மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் விஜய் ஆண்டனியை சேர்த்துள்ளார்கள். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மிக பெரிய அளவில் முகம் சேதாரம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இனி விஜய் ஆண்டனி படத்தில் நடிப்பது சிரமம் என்பதால், ஜெர்மனி சென்று பிளாஸ்டிக் சார்ஜ்ரி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பலத்த காயம் அடைந்துள்ள விஜய் ஆண்டனி பூரண நலம் பெற பலரும் பிராத்தனை செய்து வருவது குறிப்பிடதக்கது.