அதிகாலை திடீரென விஜய் ஆண்டனி மகள் எடுத்த விபரீத முடிவு… மன உளச்சலுக்கு இது தான் காரணமா.?

0
Follow on Google News

இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரை மட்டுமின்றி விஜய் ஆண்டனியை நேசிக்கும் ரசிகர்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.நன்கு படிக்கக்கூடிய மாணவி விஜய் ஆண்டனியின் மகள் மீரா, பள்ளியில் சிறந்த மாணவியாகவும் மாணவர்களின் கல்சரல் தலைவியாகவும் இருந்து வந்த ஒரு திறமையான மாணவி மன அழுத்தம் காரணமாக மரணம் அடைந்துள்ளார் என்கின்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பிலும் மற்ற துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு மாணவிக்கு எந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டிருக்க கூடும் என்கின்ற குழப்பமும் நீடித்து வருகிறது, சென்னையில் மவுண்ட் ரோட்டில் உள்ள மிக பிரபலமான பள்ளியில்பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி விஜய் ஆண்டனி மகள் மீரா, இதுவரையும் அவருடைய படிப்பில் எந்த குறையும் இல்லாமல் மிகவும் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி மீராவின் தந்தை ஒரு மிகப்பெரிய நடிகர் அந்த வகையில் அவர்களுக்குள் பொருளாதாரத்தில் எந்த குறையும் இல்லை, அந்த மாணவிக்கு என்ன வேண்டும் என்றாலும் அதை அவரால் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியும் வீட்டில் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் ஆண்டனி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கூட அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா என்று செல்லக்கூடியதை வழக்கமாகவே கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பள்ளியில் திறன்பட செயல்படும் மாணவி மீராவிற்கு பள்ளியில் சிறந்த மாணவிக்கான அங்கீகாரத்தை பள்ளியில் பள்ளியில் வழங்கப்பட்டு கவுரவ படுத்தப்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் விஜய் ஆண்டனி மகள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாலும் கூட எந்த ஒரு விஷயத்துக்காக மன உளைச்சல் அடைந்து இருப்பார் என்கின்ற முழுமையான காரணம் இதுவரை வெளிவராத நிலையில்,

தொடர்ந்து போலீசார் அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் அவருடன் படித்த சக மாணவ மாணவியரிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் தமிழ் சினிமா துறையில் அனைவராலும் நல்லவர் என்று போற்றக்கூடிய விஜய் ஆண்டனியின் மகளின் மரணம் என்பது மிகப் பெரிய துயரத்தை ஆழ்த்தியுள்ள நிலையில் அவருடைய தற்கொலை மரணத்திற்கு காரணம் அவர் மன உளைச்சலில் இருந்தது என்றாலும் கூட,

பொதுவாக பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் தனிமையில் விடாமல் அவர்களை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு , அவர்கள் என்ன சிந்தனையில் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, கடும் மன உளைச்சலில் தங்கள் குழந்தைகள் இருப்பதை அறிந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றோர்கள் எடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காரணம் நல்ல படிக்கக்கூடிய மாணவி மேலும் பள்ளியிலேயே சிறந்து விளங்குவதற்காக அவருக்கென தனி அங்கீகாரமும் கொடுத்து கௌரவம் படுத்தப்பட்டுள்ளது, அந்த வகையில் தான் அடைந்த அந்த உயரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு மன உளைச்சலும் கூட ஒரு மாணவிக்கு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேக எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் விஜய் ஆண்டனியின் மகளின் தற்கொலை மரணத்தில் அவருடன் சேர்ந்து நாமளும் இந்த துக்கத்தில் பங்கேற்றுக் கொள்வது மட்டுமின்றி இனிவரும் காலங்களில் மாணவர்கள் மாணவியர்கள் தற்கொலைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அதற்கான தீர்வைகான பெற்றோர்கள் மாணவ மாணவிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களின் பிரச்சனையை அறிந்து தீர்வு காண வேண்டும் என்கின்றது மருத்துவ ஆலோசகர்கள்.