இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விஜய் ஆண்டனி இசையில் வெளியான அட்ரா அட்ரா நாக்க முக்க என்கின்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி அனைவராலும் அறியப்பட்டவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இப்படி இசைப் பயணத்தில் தமிழ் சினிமாவை தொடங்கிய விஜய் ஆண்டனி நடிகராக அவதாரம் எடுத்தவர், தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தன்னுடைய சொந்த தயாரிப்பில் எடுத்து வந்தார்.
பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் விஜய் ஆண்டனி, தொடர்ந்து இடைவிடாமல் படங்களின் நடித்து வருகிறார். தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஆறு படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி, 2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது பிச்சைக்காரன் பார்ட் 2படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இவிஜய் ஆண்டனி இந்த படத்தை அவரே தயாரித்து வருகிறார். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் ஒரு கடற்கரையில் அதி வேகமாக தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டரில் சேசிங் செய்வது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி அதிவேகமாக தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டரில் லைப் ஜாக்கெட் ஏதும் அணியாமல் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் அதிவேகமாக அந்த தண்ணீரில் ஓடும் பைக்கை விஜய் சேதுபதி இயக்குவது போன்ற ஒரு காட்சியில் அந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து அவர் முன்பாக சென்ற ஒரு படத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி கடல் நீருக்குள் மூழ்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாது என்பதால் கடல் நீரை பெருமளவு குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அங்கே படப்பிடிப்பு தளத்திலிருந்து கேமராமேன் நன்கு நீச்சல் தெரிந்தவர் என்பதால் நீருக்குள் மூழ்கி விஜய் ஆண்டனியை காப்பாற்றி கரை சேர்த்து உள்ளார். விஜய் ஆண்டனி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு ஒரு ஆபத்தான சூழலில் இருந்துள்ளார். ஆனால் படப்பிடிப்பில் இருந்தவர்கள் முதலுதவி செய்து உடனே மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் விஜய் ஆண்டனியை சேர்த்துள்ளார்கள்.
அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது மூச்சு விடுவதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இருந்தாலும் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிலே சிகிச்சை பெற்று வருவதால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மலேசியாவில் இருந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவது.