இதை தவிர்த்து இருக்க வேண்டும்… விஜய் ஆண்டனி மகள் விபரீத முடிவு நிச்சயம் தவிர்க்க பட்டிருக்கும்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அனைவராலும் நற்சான்றிதழ் கொடுத்து நல்ல மனிதர் என்கின்ற ஒரு அடையாளத்துடன் இருந்து வருகின்றவர் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி, யார் மீதும் வன்மம் இல்லாமல் தன்னை பிடிக்காமல் இருப்பர்வர்கள் கூட நேரில் வந்தால் சிரித்து பண்பாக பேசக்கூடியவர் விஜய் ஆண்டனி. மலேசியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட ஏற்பட்ட விபத்து காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து அதில் உயிர் பிழைத்து வந்தார்.

இப்படி ஏற்கனவே பல துயரங்களை சந்தித்து வந்த விஜய் ஆண்டனியின் மகளின் சமீபத்திய மரணம் விஜய் ஆண்டனியை மீட்டு வர முடியாத ஒரு துக்கத்தை அவருக்கு ஏற்படுத்தி விட்டது, மகளின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஜய் ஆண்டனி, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.

மேலும் என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என விஜய் ஆண்டனியின் அறிக்கையை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் தற்போது நிகழும் தற்கொலைக்கு இன்றைய வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மிகப்பெரிய ஒரு பங்களாவில் குடியேறும் பொழுது அந்த குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனி அறைகள் என பிரித்து தங்கி விடுகிறார்கள். இது ஒரு தவறான செயல் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

ஒரு கூட்டுக் குடும்பமாக கிராமங்களில் கடந்த காலங்களில் இருக்கும் பொழுது ஒரே வீட்டில் ஒன்றாக தூங்குவதற்கு முன்பு அன்றைய விஷயங்களை பகிர்ந்து தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை சரி செய்து மகிழ்ச்சியுடன் தூங்க செல்வார்கள்.ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை நடைமுறை இப்போது இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்று தங்களை அதிகம் தனிமைப்படுத்தும் வாழ்க்கை என்பது தனியாக பல விஷயங்களை சிந்திக்க வைத்து ஏற்கனவே மன உளைச்சலில் இருப்பவர்களை மேலும் மன உளைச்சலாக்கும் ஒரு செயல் தான் என எச்சரிக்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

அந்த வகையில் என்னதான் என்று நகர வாழ்க்கையில் பிஸியாக பெற்றோர்கள் இருந்தாலும் தினந்தோறும் தங்கள் குழந்தைகளிடம் பள்ளியில் அன்றாட நடந்தது விஷயங்களை சோகமான விஷயங்கள், நகைச்சுவை நிகழ்வுகள் என சேர்ந்து பேசி மகிழ வேண்டும் என்கின்ற கட்டாய காலகட்டத்தில் இன்று பெற்றோர்கள் அனைவரும் இந்த வாழ்க்கை முறையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி மகளுக்கு மன ரீதியான பிரச்சனை காரணமாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அதற்கான மாத்திரை மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளார், இப்படி ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவரை தனியான அறையில் படுக்க விட்டிருக்க கூடாது என்கின்ற ஒரு கருத்து மட்டும் நிலவி வருகிறது.

அனைவருடன் சேர கூட ஆட்களுடன் சேர்ந்து எப்பவுமே இருக்கும் பொழுது ஒருவேளை அந்த விபரீத முடிவை எடுக்கும் மனநிலை விஜய் ஆண்டனி மகளின் மீராவிற்கு வந்திருக்காது என்கின்றனர் விஜய் ஆண்டனியின் அனுதாபிகள், ஏற்கனவே விஜய் ஆண்டனி மகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த ஒரு விஷயத்தில் அதாவது அவரை தனி அறையில் தங்க விட்டடிருக்க கூடாது என்று தங்கள் அனுதாபங்களை பகிர்ந்து வருகிறார்கள் விஜய் ஆண்டனியின் அனுதாபிகள்.