நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் தற்பொழுது மெகா சீரியல் என்கின்ற விமர்சனத்துடன் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலும் கூட வாரிசு படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போனது. முதல் நாள் படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் குவிந்த ரசிகர் கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பெருமளவு மக்கள் கூட்டம் குறைய தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் அஜித் படத்துடன் மோதியது போன்று தெலுங்கில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் படங்களுடன் வாரிசு படத்தை மோதுவதற்கு திட்டமிட்டு இருந்தார் விஜய்.ஆனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் இது ஒரு ஆரோக்கியமான போட்டி இல்லை என்பதை உணர்ந்து, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படம் வெளியாகி அடுத்த நான்கு நாள்கள் கழித்து வாரிசு படத்தை ரிலீஸ் செய்தார்.
வாரிசு படம் படு மோசமான ரிசல்ட்டை தெலுங்கில் பெற்றுள்ளது, இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான பல படங்களின் கலவையாகவே வாரிசு பட கதை அமைந்துள்ளதாக அங்கே படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தில் இடம்பெற்ற இசை ஏற்கனவே பல தெலுங்கு படங்களில் இடம்பெற்ற இசை போன்று அமைந்துள்ளது. இந்த படத்திற்கு 250 கோடி என்பது ரொம்ப அதிகம் என்று விமர்சனம் செய்துள்ள தெலுங்கு பட ரசிகர்கள்.
மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படத்தின் காட்சிகளை விஜய் காப்பி அடித்துள்ளார் என்கின்ற விமர்சனத்துடன் கழுவி கழுவி ஆந்திரவில் உள்ள சினிமா ரசிகர்கள் ஊற்றி வருகிறார்கள், மேலும் இந்த லட்சணத்தில் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியுடன் போட்டி போட வேண்டுமா பேசாம போவியா என்கின்றார்கள் படம் பார்த்து வெளியே வந்து ரிவியூ கொடுக்கும் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.