நடிகர் விஜய் அவருடைய மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாவே எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் ஜோடியாக பார்க்க முடியவில்லை, இதற்கு விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, சங்கீதா அவருடைய தந்தை இருக்கும் லண்டனில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்டார், விஜய் தனியாக சென்னையில் இருந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் பிரிவதற்கு முக்கிய காரணமே, திரிஷா உடன் விஜய் நெருக்கமாக இருந்து வந்ததது தான் என கூறப்பட்டது. மேலும் சமீபத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் ரகசியமாக ஜோடியாக சென்ற வீடியோ ரகசியமாக எடுத்து ஒருவரால் வெளியானது, இது திரிஷா – விஜய் இருவருக்கும் இடையிலான கிசு கிசுவை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் லண்டனுக்கு சென்ற பின்பு, விஜய் கண் பார்வையில் திரிஷா இருக்கும் படி பல வேலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே நடிகை திரிஷாவுக்கு வீடு இருக்கும் நிலையில், விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டின் அருகில் சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை திரிஷா வாங்கி அங்கே குடிருப்பதாக கூறப்பட்டது.
நீலாங்கரையில் விஜய் வீட்டின் அருகிலே திரிஷா வீடு வாங்கி குடியேறியயதாக பேசப்பட்டு வந்த போது, விஜயின் அலுவலகம் பெசன்ட் நகரில் செயல்பட்டுவந்தது. இதனை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் ஒசாலி ஓட்டல் இருந்த இடத்தில் அப்பாசாமி பில்டர்ஸ் என மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு வந்த நிலையில், . இந்த அப்பார்ட்மெண்டில் 15வது தளத்தை விஜய் 25 கோடி கோடி கொடுத்து வாங்கினார்.
இந்த 15வது தளம் முழுவதும் நடிகர் விஜயின் அலுவலகமாக செயல்பட தொடங்கியுள்ளது. அதே அப்பார்ட்மென்டில் 17 கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கி குடியறியுள்ளார் நடிகை திரிஷா, அந்த வகையில் ஒரே அப்பார்மெண்டில் விஜய் அலுவலகமும், திரிஷா குடியிருக்கும் வீடும் இருக்கும் நிலையில், இதெல்லாம் எதார்த்தமாக நடக்க வாய்ப்பே இல்லை என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
மேலும் விஜய் தான் தன்னுடைய புதிய அலுவலகம் இருக்கும் பட்டினம்பாக்கத்தில் உள்ள ஒரே அப்பார்மெண்டில் த்ரிஷாவை வீடு வாங்கி குடியேற சொன்னதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரே அப்பார்மெண்டில் விஜய் அலுவலகம், திரிஷா வீடு என இருக்கும் நிலையில், விஜய் – திரிஷா இருவரும் ஒரு லிப்டில் இருக்கும் புகைப்படத்தை திரிஷா வெளியிட்டு இருந்தார், இந்த லிப்ட் புகைப்படம் கூட விஜய் அலுவலகம், திரிஷா வீடு இருக்கும் ஒரே அப்பார்ட்மென்டில் இருக்கும் லிப்ட் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நீலாங்கரை வீட்டின் அருகிலே ஒரு வீட்டை வாங்கி குடியேறினார் திரிஷா, அதனை தொடர்ந்து விஜய் அலுவலகம் இருக்கும் அப்பார்மெண்டில் புதியதாக வீடு வாங்கி குடியேறினார் திரிஷா, அது மட்டுமில்லாமல், நைஜிரியா நாட்டிற்கு திரிஷா – விஜய் இருவரும் ரகசிய சுற்றுலா சென்ற புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலானது, மேலும் சமீபத்தில் தனி விமானத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடியாக ரகசியமாக சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா என பலரும் கிண்டல் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.