நடிகர் விஜய் மனைவி சங்கீதா அவருடைய கணவர் விஜயை விட்டு பிரிந்து கடந்த சில காலமாக லண்டனில் தனியாக தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே போன்று நடிகர் விஜய்யும் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து சென்னையில் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
நடிகர் விஜய் அவருடைய மனைவியை மட்டும் பிரிந்து வாழாமல், தன்னுடைய தாய் தந்தை தன்னுடைய குழந்தை என தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்த பின்பு விஜய் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது லண்டனில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தை தான் விஜய் பார்க்கப் போகிறார்.
பொதுவாகவே நடிகர் விஜய் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு லண்டன் சென்று சில நாட்கள் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவார், அந்த வகையில் தற்பொழுது லண்டனில் இருக்கும் தன்னுடைய மனைவி குழந்தைகளை சந்திக்க தான் வெளிநாடு செல்கிறார் என்று ஒரு பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் நடிகர் விஜய் அவருடைய மனைவிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் சிலர் முட்டு கொடுத்து வந்தனர்.
ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் விஜய் திரிஷா இருவரும் நைஜீரியா நாட்டில் சுற்றுலா சென்று கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி, விஜய் அவருடைய மனைவியை பார்க்க லண்டன் செல்லவில்லை, த்ரிஷாவுடன் நைஜீரியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அம்பலமானது. அந்த வகையில் சுமார் இரண்டு வருடங்களாக நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்,
அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜயும் சங்கீதாவும் எந்த ஒரு பொது நிகழ்விலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. மேலும் விஜய் பல நிகழ்ச்சிகளில் த்ரிஷா உடனே ஜோடியாக காணப்பட்டார். இந்நிலையில் விஜய் – சங்கீதா இருவரும் விவாகரத்து பெறாமல் சில ஒப்பந்தம் போட்டு பிரிந்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லியோ படத்திற்கு முன்பு வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்திருக்கிறது.
இந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்தால் விஜயின் சினிமா கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும், அதே நேரத்தில் விஜயின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தவனம் ஆகிவிடும் என்பதால், மேலும் குழந்தைகள் நலன் கருதி விஜய் – சங்கீதா இருவரும் அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு நாகரீகமாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே சங்கீதாவிடம் ஒப்படைத்து இருக்கிறார் விஜய். தமிழகத்தில் இருக்கும் சில சொத்துக்கள் மட்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய், இந்த சொத்துக்களும் எதிர்காலத்தில் தன்னுடைய மனைவி குழந்தைகளுக்கு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அந்த வகையில் தன்னுடைய குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக தேவையான அனைத்தையும் செட்டில் செய்து, குறிப்பாக தான் சம்பாதித்த சொத்துக்கள் பெரும் பங்கை மனைவி இடம் ஒப்படைத்துவிட்டு இனி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று விஜய் விடுத்த கோரிக்கையை சங்கீதாவும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் சங்கீதா கணவனை விட்டு பிரிந்தாலும் எதற்காக பிரிந்தோம் என்ன பிரச்சனை என்று கணவர் விஜய் குறித்து எதுவுமே பேசாமல் இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சினிமா துறையை சேர்ந்த பலரும் அறிக்கை வெளியிட்டு பிரிவதற்கு பதில் இது போன்று சாந்தமே இல்லாமல் நாகரிகமாக பிரிவது, பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது என விஜய் – சங்கீதா பிரிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.