விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது என நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து, எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தான் கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என நடிகர் விஜய் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது, நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருக்கு இடையில் என்ன தான் பிரட்சனை என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தனது மகன் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு கட்டத்தில் நச்சத்திர அந்தஸ்துக்கு நடிகர் விஜய் உயர்ந்ததும் சினிமாவில் விஜய் கவனம் செலுத்த, அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனுக்காக ரசிகர் மன்றங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர், ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது, விஜய் ரசிகர்கள் அடிக்கும் போஸ்டரில் அவருடைய தந்தை புகைப்படமும் இடம் பெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் மன்றம் களம் காண வேண்டும் என விரும்பியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்காக ஒரு முக்கிய கட்சியிடம் கூட்டணி பேரமும் பேசியுள்ளார் என்று கூறபடுகிறது, ஆனால் நடிகர் விஜய்க்கு தற்போது சினிமாவில் தனக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருப்பதால், அரசியலுக்கு வந்தால் தனது மார்க்கெட் இழந்து விடும், இதனால் இன்னும் சில காலம் கழித்து அரசியல் பற்றி யோசிக்கலாம் என முடிவெடுத்துள்ளார்.
ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர், இது தான் சரியான தருணம் என பிடிவாதம் பிடிக்க அப்பா மகன் இடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. தொடர்ந்து வீட்டுக்குள் இவர்கள் இருவருக்கும் நடந்து வந்த சண்டை ஒரு கட்டத்தில் மக்கள் இயக்கம் என எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்த பின் இவர்கள் சண்டை தெருவுக்கு வந்தது, இதனை தொடர்ந்து இருவருக்கு இடையில் கருத்து முரண்பாடு காரணமாக சண்டை உச்சக்கட்டம் அடைந்தது.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் மன்றத்தை பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு தெரியாமல் வசூல் வேட்டையில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஈடுப்பட்டுள்ளது விஜய் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து. மேலும் தனது தந்தை மீது கோபம் அடைந்தவர், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரும் எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என மறைமுக அதிரடி உத்தரவிட்டுள்ளார் நடிகர் விஜய் என கூறபடுகிறது.