மணிரத்தினம் இயக்கத்தில் 80களில் வெளியான படம் நாயகன், மும்பை டானாக கமல்ஹாசன் இந்த படத்தில் நடித்திருப்பார். இதில் கமல்ஹாசனின் வேலு நாயக்கர் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் நாயகன்.அதனைத் தொடர்ந்து ஐந்து வருட இடைவேளைக்கு பின்பு 90களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாட்ஷா.
மும்பை டானாக ரஜினிகாந்த் நடித்த இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருப்பார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் இன்றளவும் முதல் இடத்தில் இருக்கிறது பாட்ஷா, அந்த அளவுக்கு ரஜினிகாந்த் தோன்றும் மும்பை டான் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நாயகன், ரஜினிகாந்த் பாட்ஷா இது போன்று தங்களும் ஒரு மும்பை டான் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு போட்டியாக களம் இறங்கிய முன்னணி நடிகர்கள் தொடர் தோல்வியை சந்தித்தது தான் வரலாறு. அஜித் நடிப்பில் வெளியான ஜி படம் மும்பை டான் தொடர்பான ஒரு கதைய அம்சம் கொண்டது.
ஆனால் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் மோசமான தோல்வியை சந்தித்த படங்களில் ஜி. மற்றொரு மும்பை டான் கதையான நாயகன் சாயலில் விஜய் நடிப்பில் வெளியான படம் தலைவா. இந்த படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் மும்பை டான் கதையை கொண்ட படம், இதுவும் படுதோல்வியை சந்தித்தது.
நாயகன் மற்றும் பாட்ஷா தவிர்த்து மற்ற முன்னணி நடிகர்கள் மும்பை டான் கதையில் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் வெந்து தணிந்தது காடு படமும் மும்பை டான் கதைய அம்சம் கொண்டதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல் தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும் மும்பை டானாக மண்ணை கவி வந்த நிலையில், வெந்து தணிந்து காடு படத்தில் சிம்பு வெற்றி பெறுவாரா படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.