கோலிவுட்டில் நம்பர்.ஒன் நடிகராக வலம் வரும் விஜய், புஸ்ஸி ஆனந்திடம் மட்டும், பொட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார், அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே தலையாட்டும் பொம்மை போல் கேட்கிறாரே, அப்படி அந்த அளவுக்கு புஸ்ஸி ஆனந்திடம் என்ன செல்வாக்கு இருக்கிறது என பலரும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.
ஆனால் முதலில் சாதாரண விறகு கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த், தற்போது எப்படி பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆனார் என்ற செய்தி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. விஜய்யின் ரைட் ஹேண்டாக செயல்படும் புசி ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், முதலில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்திருக்கிறார்.
அதன் பிறகு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பிய இவர், அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில், மீனவ குடியிருப்புகள் அதிகமாக இருப்பதாலும், அந்த பகுதிகளில் நடிகர் விஜய் மிகப் பிரபலமாக இருப்பதையும் தெரிந்து கொண்டு, அரசியலில் பெரிய ஆளாக வர விரும்பிய இவர், விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அதிக அளவு பொருள் உதவிகள் செய்து அவர்களின் வாக்குகளை தன் பக்கம் இழுத்துப் போட பக்காவாக வேலை செய்து இருக்கிறார்.
இப்படி தான் முதன்முதலில் விஜய் ரசிகர் மன்றத்திற்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்துள்ளார். அதோடு 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே விஜய் மற்றும் அவரது தந்தையை சந்தித்து விஜய் ரசிகர் மன்றத்திற்கு தான் செய்து வரும் உதவிகளை சொல்லியும் அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த விஜய் நடித்த காவலன் படத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தது.
அதாவது அந்த படத்திற்கு முன்பு விஜய் நடித்த சுறா படம் ப்ளாப் ஆனதால், சுறா படத்திற்கான நஷ்டத்தை விஜய் கொடுத்தால் மட்டும்தான் காவலன் படத்தை ரிலீஸ் ஆக அனுமதிப்போம் என தமிழ் திரைப்பட ப்ரொடியூசர்கள் போர் கொடி தூக்கினார். ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த, ஆடுகளம் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆக இருந்ததால் அப்போது ஆளும் அரசாக இருந்த திமுகவிடம் இதைச் சொல்லி, விஜய்யின் காவலன் படத்திற்கு சன் பிக்சர்ஸ் முட்டுக்கட்டை போட தீவிரமாக வேலை பார்த்தது.
அப்போதுதான் கடும் அப்சட்டில் இருந்த விஜய்க்கு உதவும் விதமாக, பாண்டிச்சேரி எம்.எல்.ஏ-வாக இருந்த புஸ்ஸி ஆனந்த், காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுகவை, தனது காங்கிரஸ் தொடர்பாளர்கள் மூலம் அணுகி பேச்சு வார்த்தை நடத்தி, ஆளும் தரப்பின் ஆதரவுடன், காவலன் படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆக செய்தார்.
அதற்குப் பிறகுதான் புஸ்ஸி ஆனந்த் விஜயின் குடும்ப நண்பராகவே மாறி, தற்போது விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளராகவும் உருவெடுத்துள்ளார். ஆனால் இவர் முதலில் என்ன வேலை செய்தார் என்று சொன்னால் அனைவரும் ஷாக் ஆகி விடுவார்கள் . இவர் புதுச்சேரியில் விறகு கடை முதலாளியாக தான் இருந்திருக்கிறார், ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்தில், பல கோடி சொத்துக்கு அதிபதி ஆகிவிட்டார்..
விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்த புஸ்ஸி ஆனந்த், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற பல வேலைகளை செய்து கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் என செய்திகளும் வெளியாகி இருந்தது. புஸ்ஸி ஆனந்த் மிகவும் கராரான ஆளாக இருப்பதால், விஜய்யிடம் யாரையும் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறார் என்றும், அவர் அரசியல் தலைவராகவும் இருந்ததால் அதன் நுணுக்கங்கள் விஜய்க்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதனால் தான் அவரை தனது ரைட் ஹேண்டாக விஜய் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.