விஜய் யார் பக்கம்… கீர்த்தி சுரேஷ் பக்கமா.? திரிஷா பக்கமா.? மல்லுக்கட்டும் திரிஷா -கீர்த்தி சுரேஷ்…

0
Follow on Google News

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஜூன் 22ம் தேதி தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் அந்த மனுஷனை பார்த்தால் 50 வயது மாதிரியே தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வயது தான் ஏறிக் கொண்டே போகிறதே தவிர அவர் அப்படியே இளமையாகத் தான் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சய்க்கு அண்ணன் போன்று மிகவும் இளமையாக தெரிகிறார் விஜய்.

விஜயின் 50வது பிறந்தநாளுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இருந்தனர். அதில் பிரபு தேவா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் வம்சி என பல பிரபலங்களின் போட்டோக்கள் இணையத்தில் பரவியது. பிறந்தநாள் முடிய போகும் தருவாயில் இரவு கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். அதனுடன் த்ரிஷா விஜயுடன் ஃலிப்டில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் திரிஷாவுக்கு விஜயை பிடிக்கும், கீர்த்தி சுரேசுக்கு விஜயை பிடிக்கும், ஆனால் விஐய்க்கு இந்த இரண்டு நடிகைகளில் யாரை பிடிக்கும் என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே விஜய் நெருங்கிய நண்பர் சஞ்சய் வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷை விஜய் குடியமர்த்தி தன்னுடைய மேனஜர் ஜெகதீஸ் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு தேவையான உதவியை விஜய் செய்து வருவதாகவும்.

அதே போன்று விஜய் வீட்டின் அருகிலே புதிய வீடு வாங்கி திரிஷா குடியேறியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இவர்களில் யார் விஜயின் அதி தீவிர ரசிகை என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் தொடர்பான கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல.. அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய உச்ச நட்சத்திர ஜோடி என்றால் அது விஜய் – த்ரிஷா தான். விஜய் – த்ரிஷா இடையே ரகசிய உறவு இருப்பதாக கில்லி, ஆதி படங்கள் வெளியான போதே தகவல் பரவியது.

அப்போதே விஜய்யும் – த்ரிஷாவும் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் நாளடைவில் மங்கிய நிலையில் தற்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. குறிப்பாக . படப்பிடிப்பு இல்லாத சமயங்கள் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது போன்ற பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரின் இந்த பதிவுக்கு அது விஜய் – த்ரிஷாவின் தனிப்பட்ட விஷயம் என்றும் அதை பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

அதே மறுபுறம் விஜய் த்ரிஷாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். விஜய்யையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ, அதே போல் விஜய்க்கு த்ரிஷா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விஜய் – கீர்த்தி சுரேஷ் இடையே இருக்கும் உறவை குறிப்பிட்டு, விஜய்யின் கட்சி பெயர் தமிழக, வெற்றிக் கழகம் இல்லை, T த்ரிஷா, V விஜய், K கீர்த்தி அது தான் TVK என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.