விஜய் எனக்கு போட்டியா… எனக்கு தெருஞ்சு வளர்ந்த பையன் விஜய்… வெளுத்து வாங்கிய ரஜினி…

0
Follow on Google News

ரஜினிகாந்த் – விஜய் இருவருக்கும் இடையிலான சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கையில், பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்பது போன்று ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் காக்கா – கழுகு கதை மூலம் விஜயை வெச்சு செஞ்சார் ரஜினி. இந்நிலையில் தற்பொழுது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் மீண்டும் விஜயை வெச்சு செய்துவிட்டார் ரஜினி.

லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினி, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா – கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அது தம்மை வேதனையடைய செய்தது என்றும் கவலை தெரிவித்த ரஜினிகாந்த், விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன்.”தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருக்கும்போது விஜய்க்கு 13-14 வயதிருக்கும். அப்போது சந்திரசேகர் எனது பையன் என என்னிடம் அறிமுகப்படுத்தினார்.

நடிப்பில் ஆர்வம் இருக்கிறது எனச் சொன்னார். அதன் பிறகு விஜய் நடிக்க வந்து படிப்படியாக தனது திறமை, உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். மறுபடி இப்போது அவர் சமூக சேவைக்கு போவதாக கேள்விப்பட்டேன். “இந்த நிலையில் எனக்கு போட்டி என சொல்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. விஜயே
சொன்னது போல அவர் படத்துக்கு அவர்தான் போட்டி. எப்போதுமே தான் விஜய்யின் நலம் விரும்பி என்று கூறிய ரஜினி,

விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை. எனக்கு கௌரவம் இல்ல. விஜய் என்னை போட்டின்னு நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்கள் தவிர்த்துவிடுங்கள் என பேசிய ரஜினிகாந்த், விஜய் அரசியலுக்குவாழ்த்து தெரிவித்தவர், விஜய் மற்றும் என்னுடைய ரசிகர்கள் காக்கா – கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இதுவரை இருந்து வந்த விஜய் ரஜினி இருவருக்கும் இடையிலான காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ரஜினிகாந்த் பேசியது போன்று இந்த பேச்சு தெரியவில்லை, விஜய்க்கு தனக்கு எதிரி இல்லை எப்போது போன்று ரஜினி பேசி இருந்தாலும், விஜயை வெளியில் தெரியாமல் ஊமை குத்தாக குத்திவிட்டார் ரஜினிகாந்த் என்றே சொல்லலாம்.

அதாவது விஜய் தான் ஆரம்பத்தில் ரஜினியை சீண்டியது, விஜய் தான் தனக்கு போட்டியாராக ரஜினியை முன்னிறுத்தி வந்தது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காக்கா – கழுகு கதை சொல்லி விஜயை ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் வெச்சு செய்துவிட்டார் ரஜினி. இந்நிலையில் தற்பொழுது விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன்.”தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருக்கும்போது விஜய்க்கு 13-14 வயதிருக்கும் என விஜயெல்லாம் நான் சூப்பர் ஸ்டாராக இருக்கும் போது பொடி பையன் இவருக்கு எனக்கு போட்டியா என்கிற தோரணையில் பேசியுள்ள ரஜினி.

மேலும் விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை என்று பேசியது, அதாவது என கண்னுக்கு முன்னால் வளர்ந்த பையன் விஜயை நான் போட்டியாளர் என்று நினைச்சா அது எனக்கு தான் மரியாதை இல்லை என்றும், அதே போன்று விஜய் என்னை போட்டின்னு நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை பேசியது, அதாவது, என்னுடைய ரசிகர் என்று அவருடைய ஆரம்ப கட்ட படத்தில் காட்சிகள் வைத்து என் பெயரை பயன்படுத்தி வளர்ந்த விஜய், என்னை போட்டியாளராக நினைச்சா அது அவருக்கு மரியாதை இருக்காது என மறைமுகமாக விஜயை வெச்சு செஞ்சு விட்டார் ரஜினி என விமர்சனம் எழுந்துள்ளது.