படமா இது? மனுஷன் இந்த படத்தை பார்ப்பானா.? தங்கலாம் படத்தை பார்த்து டென்ஷனாகி வெளியேறும் ரசிகர்கள்..

0
Follow on Google News

கடந்த 1990 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கிடைத்த நடிகர் விக்ரம், கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். குறிப்பாக சேது, காசி, சாமி, பிதாமகன், அந்நியன், ஐ என வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்த இவர், தற்போது தங்கலான் படத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார்.

உடலை வருத்தி, கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தி காட்டக்கூடிய இவருக்கு, தங்கலான் படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது விலா எலும்பு நொறுங்கியது, அப்போதும் அவர் மீண்டும் வந்து நடித்திருந்தார். அந்த அளவிற்கு அதிக ஈடுபாடு கொண்டு இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார். ஆனால் இன்று வெளியான தங்கலான் படம் எப்படி இருக்கு என படம் பார்த்து ரசிகர்கள் கூறிய விமர்சனம் தான் தற்போது விக்ரமுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பல போராட்டங்களுக்குப் பிறகு தங்கலான் படம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஞானவேல் ராஜா ஒரு கோடி ரூபாய் அபராதம் கட்டினால் தான் படம் வெளியாகும் என பல தடைகளும் வந்தது. இப்படி பல தடைகளை தாண்டி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூகளை விட, நெகட்டிவ் ரிவ்யூக்கள் தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

எந்த ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், கோவணம் கட்டிக்கொண்டு, வெயில், மண், சகதியோடு நடிப்பது எல்லாம் சர்வ சாதாரணம் கிடையாது. ஆனால் விக்ரம் இப்படியெல்லாம் நடித்ததற்கு ஒரே காரணம் அவர் சினிமா மீது கொண்ட காதல் அவரின் நடிப்பு திறமை தான். ஏற்கனவே இவர் பிதாமகன் படத்துக்காக தேசிய விருது வாங்கிய நிலையில், தங்கலான் படத்திற்கு ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும் என எதிர்பார்க்க பட்டது.

சியான் விக்ரமின் கடுமையான உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ரிலீசான காலையிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் குவியத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பழங்குடியின மக்களுடன் பழங்குடியின தலைவனான தங்கலான், தங்கத்தை தேடும் வேலையில் இறங்குகிறார்.

அப்போது சூனியக்காரியான மாளவிகா மோகனனின் கோபத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து தங்களது முழு பலத்துடன் சூனியக்காரியை எதிர்த்து புறப்படுகிறார் தங்கலான். தங்கலான் படத்தின் முதல் பாதி கூஸ்பம்சாக இருந்தாலும், இந்த படத்தின் பல இடங்களில் லேக் காட்சிகள் இருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு அருமையாக இருக்கிறது, ஆனால் படத்தின் கதை சுத்தமாக பிடிக்கவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல் பா.ரஞ்சித்தின் கெரியரிலேயே மிகவும் மோசமான படம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் முதல் 20 நிமிடங்கள் படம் புரியவே இல்லை என்றும், அந்த மொழியை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தான் தங்கலான் படம் வெறும் மங்கலான் படமாக மங்கிப் போய்விட்டது என்றும் சினிமா விமர்சனங்களும் காட்டமான விமர்சனத்தை கொடுத்திருக்கின்றனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் எங்க தலைவன் உழைப்பை வீணடித்து விட்டார் என விக்ரம் ரசிகர்கள் ரவுண்ட் கட்டி பொளந்து வருகின்றனர். டாப் நாட்ச்சாக தங்கலான் படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி டல் அடிக்கிறது என்றும், சாரி சியான் எனவும் ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தங்கலான் படம் காலையிலிருந்து நெகட்டிவ் ரிவ்யூகளை பெற்று வருவதால், விக்ரம் கடின உழைப்பை போட்டு நடித்து இருந்தாலும் பா.ரஞ்சித்தின் சொதப்பலான இயக்கத்தால் தங்கலான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.