தான்கலான் படத்திற்கு முடித்து சோலி… பா ரஞ்சித் வாயால் வந்த வினை…

0
Follow on Google News

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின்பு தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை வைத்து இரண்டு படங்களை இயக்கி, கபாலி படத்தில் கெத்தா அப்படி தாண்ட கால் மேல் கால் போட்டு உட்காருவேண்டா என்கிற வசனத்தை போன்று கெத்து காட்டினார் பா.ரஞ்சித்.ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு படங்களை இயக்கிய பின்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு ரவுண்ட் வருவார் பா.ரஞ்சித் என பலர் எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் யாரும் முன் வரவில்லை.

மேலும் ரஞ்சித் படத்தில் பணியற்றிய நடிகர் நடிகைகளுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதற்கு காரணம் பா.ரஞ்சித் பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தான் என கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பா. ரஞ்சித் பேசிய பேச்சுக்கள் எல்லை மீறி செல்கிறது என்று சொல்லும் அளவிற்கு கடும் விமர்சனம் பா ரஞ்சித்துக்கு எதிராக அமைந்துள்ளது.

குறிப்பாக மெட்ராஸ் எங்களுடையது, இங்க நாங்க இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது என்கின்ற தோரணையில் பா ரஞ்சித் பேசியது சென்னையில் வாழும் அனைத்து சமூக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பூர்வ குடி மக்களை விட பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் அதிகம். குறிப்பாக சென்னையின் வளர்ச்சிக்கு அவர்களும் முக்கிய காரணம்.

இப்படி இருக்கையில் மெட்ராஸ் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் தான் என்கிற தோரணையில் பா ரஞ்சித் பேசியது பிற சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பா ரஞ்சித்தின் பேச்சுகளில் அதிக அளவில் முரண்பாடுகள் இருக்கிறது. அதாவது நாங்கள் ரிசர்வேஷனலில் உயரத்திற்கு வரவில்லை படித்து எங்களுடைய திறமையில் தான் வந்தோம் என மேடையில் பேசிய ரஞ்சித்.

அதே மேடையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே சென்னை மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை நீங்கள் இன்று உயர் பதவியில் இருக்கிறீர்கள் என்றால் ரிசர்வேஷன் தான் என, ஒடுக்கப்பட்ட பெண்கள் உயரிய பதவியில் வந்ததை குறைத்து மதிப்பிடும் வகையில் முரண்பட்டு பேசியிருக்கிறார் பா ரஞ்சித்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து இப்படி பா ரஞ்சித் பேசி வருவது பிற சமூகத்தினர் மத்தியில் பா ரஞ்சித் மீது வெறுப்படையச் செய்து வருகிறது. இது குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் தங்கலான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக மற்ற சமூகத்தைச் சார்ந்த பலரும் குரல் கொடுத்து வருகையில்,

பா.ரஞ்சித்தின் இது போன்ற பேச்சு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் பிற சமூகத்தைச் சார்ந்த போராளிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது, இதன் எதிரொலியாக மிகப்பெரிய தாக்கத்தை தங்களால் படத்தின் ரிலீஸின் போது ஏற்படுத்து என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ப இந்த இயக்குனர் படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும் என்கின்ற மனநிலைக்கு பலரும் வந்து விட்டனர்.

மேலும் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தால் கூட ரஞ்சித் மீது உள்ள கோபத்தில் தங்களான் படத்தை வச்சு செய்வதற்காகவும் பலரும் தயாராகி வருவதை பார்க்க முடிகிறது. இதனால் ரஞ்சித்தின் படைப்புகளே மிகப்பெரிய தோல்வியை தழுவும் அளவிற்கு பா. ரஞ்சித்தின் வாய் பேச்சு வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு கலைஞனுக்கு கோபம் இருக்கலாம் அந்த கோபத்தை அவர் கையில் இருக்கும் ஆயுதமான சினிமா மூலம் சரி செய்ய வேண்டும், அதை விடுத்து ஒரு பொது மேடையில் சமூகத்தில் ஒற்றுமையாய் இருக்கும் மக்கள் மத்தியில் சீர்குழைக்கு வகையில் பா. ரஞ்சித் பேசுவது அது அவருடைய சினிமா கேரியரே க்ளோஸ் செய்துவிடும் அபாயத்திற்கு கொண்டு சென்று விடும் என பலரும் எச்சரித்து வரும் நிலையில், பா.ரஞ்சித்தின் வாய்கொழுப்புக்கு பதிலடியாக தங்களான் படத்தை மண்ணை கவ்வ வைப்பது தான் பா.ரஞ்சித்துக்கு கொடுக்கும் பதிலடி என பலரும் கருத்து தெறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.