படு மோசமாக அமைந்த தங்கலான்… இதை தான் உருட்டிட்டு இருந்தாரா ரஞ்சித்..

0
Follow on Google News

இது என்னடா விக்ரமுக்கு வந்த சோதனை! ! அப்படின்னு ரசிகர்கள் எல்லாம் பரிதாபப்படுற மாதிரி இருக்கு இயக்குனர் பா ரஞ்சித்தின் தங்கலான் டீசர். இப்படத்தின் டீசர் அண்மையில் யூட்யூபில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷனும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தங்கலான் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது, இதில் நடிகர் விக்ரம் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தாலும், டீசர் விக்ரம் நடிப்பை தவிர்த்து ஒன்றுமே இல்லை என்பதை வெளிப்படுத்துவது போன்று அமைத்துள்ளது.

ரத்தமும் யுத்தமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையிலும், ஜடாமுடி, புழுதி படிந்த உடம்பு என்ன வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் ஒரு ராஜ நாகத்தை கையில் பிடித்து அதைத் திருகி உடல் வேறு தலைவேறாக துண்டாக்கி போடும் காட்சியில் விக்ரமனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது,

தங்கத்தையும் பழங்குடி மக்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசரில் விக்ரம் டயலாக் எதுவும் பேசவில்லை, டீசர் முழுவதும் புழுதி பறக்கும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளாக இடம் பெற்றிருந்தாலும், ரசிகர்களை கவரும் படியாக இல்லை என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நடிகர் விக்ரமின் நடிப்பை தவிர்த்து இயக்குனராக தங்கலான் படத்தில் பா.ரஞ்சித்ன் படைப்பு மிக பெரிய நெகட்டிவ் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தங்கலான் பட டீசரிலும் நடிகர் விக்ரமின் அசத்தலான நடிப்பும் மற்றும் உடல் உழைப்பும் தனியாக தெரிகிறது. ஆனால் மாளவிகா மோகனன் ஓவர் ஆக்டிங் பண்ணுவதை ஒரு இயக்குனராக எப்படி பா.ரஞ்சித் கவனிக்க தவறினார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.குறிப்பாக இந்த டீசரில் யாத்திசை மற்றும் அப்பகளிப்டோ போன்ற படங்களின் வாடை தான் அடிக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது காப்பியடிப்பதில் அட்லீயை மிஞ்சிவிட்டார் பா.ரஞ்சித் என்றும், இதற்கு முன்பு வெளியான யாத்திசை, அப்பகளிப்டோ போன்ற சாயலில் தங்கலான் அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தூள் படத்தில் விவேக் காமெடியில் பறவை முனியம்மா இந்த இழவ தான் நைட் எல்லாம் ஓட்டிட்டு இருந்தியா என்று கேட்பது போன்று இதை தான் பா.ரஞ்சித் இத்தனை நாளா எடுத்தியா என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அமைத்துள்ளது தங்கலான் டீசர்.

தங்கலான் டீசர் தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், நடிகர் விக்ரமின் உடல் உழைப்பு மற்றும் அற்புதமான நடிப்பு ரசிகர்களை பாராட்டும் படி அமைத்துள்ளது. அந்த அளவிற்கு நடிகர் விக்ரம் தனித்துவமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டீசருக்கே இவ்ளோ நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தால் படம் எப்படி ஹிட் ஆகும் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வழக்கம் போல படம் நல்லா இல்லை ஆனால் விக்ரமின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது என்று கூறிவிட்டு தான் தியேட்டரில் இருந்து வெளியேறுவார்கள் போல …தியேட்டர்களில் ரிலீசானால் தான் தெரியும் தங்களான் படம் எப்படி இருக்குனு …பா ரஞ்சித் என்னதான் பண்ணி வைத்திருக்கிறார் என்று காத்திருந்து பார்க்கலாம்