நடிகர் வடிவேலு 90 களின் தொடக்கத்தில் 1991 இல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான இவர், 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். நம்ம ஊர் பையனாக இருக்கானே வடிவேலு என தொடர்ந்து விஜயகாந்த் நடிக்கும் படத்தில் வடிவேலுக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தார்.
ஆரம்பத்தில் மாற்று துணி கூட இல்லாமல் இருந்த வடிவேலுக்கு புதிய துணி வாங்கிய தந்தவர் விஜயகாந்த். நடிகர் வடிவேலு என்னதான் சினிமாவில் உச்சத்தை தொட்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவரது குணாதிசயங்கள் மூலம் பலரிடமும் வெறுப்பை தான் சம்பாதித்து வைத்திருக்கிறார். இவருடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை நடிகர்களாக பணிபுரிந்த ஒருவர் கூட இவரைப் பற்றி நல்லவிதமாக சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு இன்று சினிமாவில் உயரத்தில் இருந்தாலும், ஆரம்ப காலத்தில் கை கொடுத்து தூக்கி விட்டவர் கேப்டன் தான். ஆனால் நடிகர் வடிவேலு கேப்டன் செய்த உதவியை சிறிதும் யோசித்துப் பார்க்காமல் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பற்றி அவதூறாக பேச தொடங்கினார். திமுக கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில், கேப்டன் விஜயகாந்தை பொது மேடையில் வாய்க்கு வந்தபடி எல்லாம் அவதூறாக பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் வடிவேலு எத்தனையோ பொது இடங்களில் தன்னை பற்றி எல்லை மீறி பேசியிருந்தாலும், கேப்டன் இதுவரை வடிவேலுவை பற்றி தவறாக ஒரு இடத்திலும் பேசியது கிடையாது என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும்.கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே என்பது போல விஜயகாந்த் வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார்.கேப்டனுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத குழந்தை மனம் என்று இன்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. நடிகர் வடிவேலு விஜயகாந்த் பற்றி கேவலமாக மேடைகளில் பேசிய பின்பு, இவர் இருவரும் பல நாட்கள் நேரில் சந்தித்தது கிடையாது, இந்நிலையில் நடிகர் வடிவேலுவும் விஜயகாந்த்தும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான். இருவரும் சொந்த ஊர் மதுரைக்கு கிளம்பும்போது, ஏர்போர்ட்டில் எதர்ச்சியாக சந்தித்து இருக்கிறார்கள். அப்போது வடிவேலு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு கண்டும் காணாதவாறு கேப்டனை கடந்து சென்றிருக்கிறார்.
ஆனால், சிறிதும் தலைக்கனமின்றி வடிவேலுவை பார்த்து என்ன வடிவேலு சவுக்கியமா என விஜயகாந்த் கேட்க, ஆம் சவுக்கியம் கேப்டன் என பம்மியுள்ளார் வடிவேலு, தொடர்ந்து ஐந்து நிமிடம் வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் சென்று இருக்கிறார் கேப்டன். இந்த சம்பவம் கேப்டன் மரணம் அடைவதற்கு சில வருடங்களுக்கு முன்பு நல்ல உடல் நிலையில் இருந்த போது நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒரு சம்பவத்திலிருந்து கேப்டனுக்கு எவ்வளவு உத்தமமான மனசு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வடிவேலு சினிமாவில் புகழ் பேரை சம்பாதித்து விட்டால் போதும் என்று சக மனிதர்களை இழிவாக பேசுவதும் மதிக்காமல் நடந்து கொள்வதும் என எப்போதும் தலைக்கணத்துடனே இருந்து வருகிறார்.
இதனாலேயே என்னவோ சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவிலிருந்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்திருக்கிறார். சமீப காலமாக நடித்து வந்த படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கேப்டனை அவதூறாக பேசிய காலத்திலிருந்து வடிவேலுவின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளது.