நீ நடிக்கவே வேண்டாம் கிளம்பு… டென்ஷனில் வடிவேலுவை வெளியேற்றிய பாரதிராஜா…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் காமெடி நடிகராக மிக பெரிய உயரத்துக்கு சென்றவர் நடிகர் வடிவேலு. வருடத்திற்கு சுமார் 20 படங்களுக்கு மேலாக ஒரு காலத்தில் பிசி நடிகராக இருந்த வடிவேலு, ஒரு நாள் கால்சீட் இவ்வளவு என சம்பளம் வாங்கி கண்டிருந்த வடிவேலு முன்னணி நடிகர்களுக்கு சமமான சம்பளம் வாங்கி கொண்டு, அவருடைய காமெடி கட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி அடைந்தது.

இந்நிலையில் நிலை உயரும் போது பணிவு வேண்டும் என்கிற பழமொழிக்கு நேர் எதிராக, வடிவேலு மிக பெரிய உயரத்துக்கு சென்றதும் அவருடைய அட்ராசிட்டி எல்லை மீறி சென்றுள்ளது, இதனால் பல முன்னனி நடிகர்களுடம் மோதல் போக்கை கடைபிடித்த வடிவேலு, பட வாய்ப்புகளை இழந்து மிக பெரிய சரிவை சந்திக்க தொடங்கியவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார்.

இந்நிலையில் நீண்ட வருடத்திற்கு பின்பு தற்பொழுது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், ஏற்கனவே பட வாய்ப்புகளை இழக்க காரணமாக இருந்த அவருடைய ஆணவ போக்கினை தற்பொழுதும் கடைபிடித்து வருவதால், வடிவேலுவை வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல், தன்னுடைய ஆணவத்தின் காரணமாக மீண்டும் படவாய்ப்புகளை இழந்து நிரந்தரமாக வீட்டில் வடிவேலு முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் வடிவேலுவின் ஆரம்ப கட்ட சினிமாவில், நடிகர் ராஜ்கிரண் அலுவலகத்தில் அலுவலக பையனாக இருந்து கொண்டு, ராஜ்கிரண் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசா படத்தில் அறிமுகமான வடிவேலு.

அதன் பின்பு விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது, தற்பொழுது சினிமாவில் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் மேலும், கிழக்கு சீமையிலே படத்தில் அதிக நாள் நடிக்க வேண்டும் என்பதால் சம்பளம் அதிகம் கேட்க முடிவு செய்த வடிவேலு.

நேரடியாக இயக்குனர் பாரதிராஜவை சந்தித்து கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க 25 ஆயிரம் சம்பளம் கேட்டுள்ளார் வடிவேலு, உடனே டென்ஷனான பாரதிராஜா நீ இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம், இடத்தை காலி பண்ணு என அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளார். அங்கிருந்து கண்ணீருடன் சோகத்தில் வந்த வடிவேலுவை கிழக்கு சீமையிலே படத்தின் தயாரிப்பாளர் தாணு என்ன விஷயம் என கேட்டு தெரிந்து கொண்டார்.

உடனே வடிவேலுவுக்கு ஆறுதல் கூறி, 25 ஆயிரம் சம்பளம் கொடுத்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர், சம்பளம் பத்தி என்னிடம் கேட்க வேண்டியது தானே, எதற்கு இயக்குனரிடம் கேட்கிறாய் என வடிவேலுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு..